ஹதீஸ்
பின்செல்

சாஹிஹ் முஸ்லிம் 2 · The Book of Purification

534அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர். இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

535

536

537ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டுவிட்டால், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது. அத்தியாயம் :

538உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக் கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால்வரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இவ்வாறு அங்கத் தூய்மை செய்வதுதான் தொழுகைக்காக ஒருவர் அங்கத் தூய்மை செய்யும் முறைகளிலேயே மிகவும் நிறைவானதாகும் என்று நம் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

539

540உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) அங்கத் தூய்மை செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்த பின்,கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

541

542

543

544

545

546ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்து வைப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (ஒரு நாள்) இந்தத் தொழுகையை (அதாவது அஸ்ர் தொழுகையை) முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால்,அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினோம். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள அங்கத் தூய்மையை (உளூவை) முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

547ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (பின் வருமாறு) அறிவிப்பதை நான் செவியுற்றேன்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக அங்கத் தூய்மை செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறுதான் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது. ஃகுன்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில் எனும் வாசகமோ கடமையாக்கப்பட்ட என்ற குறிப்போ இடம் பெறவில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

548

549உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான். இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

550அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

551நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

552அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

553உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு என்று கூறுவாராயின் என்று (சற்று வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்.) அத்தியாயம் :

554

555யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததைப் போன்று எங்களுக்கு நீங்கள் அங்கத் தூய்மை செய்து காட்டுங்கள்! என்று கூறப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து சிறிதளவு நீரை தம்மிரு (முன்) கைகளில் ஊற்றி அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து ஒரு கையளவு நீர் அள்ளி, வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து தம் இரு கைகளையும் முழங்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்தெடுத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் முன்னிருந்து பின்னே கொண்டு சென்றார்கள்; பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கணுக்கால்வரை கழுவினார்கள். பிறகு இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவந்தார்கள் என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு கணுக்கால்வரை எனும் வாசகம் இடம்பெறவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (அப்துல்லாஹ் பின் ஸைத்-ரலி) அவர்கள் மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஒரு கையளவு நீரினால் எனும் வாசகம் இடம்பெறவில்லை. மேலும், அந்த அறிவிப்பில் முன்னிருந்து பின்னே கொண்டுசென்றார்கள். பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள் எனும் வாசகத்திற்குப் பிறகு தம் இரு கைகளையும் முன் தலையில் வைத்து அப்படியே அவற்றைப் பிடரிவரை கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், மூன்று முறை கையால் நீர் அள்ளி வாய் கொப்புளித்தார்கள்; மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள் என்று காணப்படுகிறது.மேலும், மஸ்ஹு செய்யும்போது ஒரேயொரு முறை முன்னிருந்து பின்னே, பின்னிருந்து முன்னே (ஈரக் கையைக்) கொண்டுசென்றார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர் பஹ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு உஹைப் (ரஹ்) அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். உஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் இரண்டு முறை சொல்லிக்கொடுத்தார்கள். அத்தியாயம் :

556

557

558

559

560

561

562

563

564

565

566

567

568

569

570அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக அங்கத்தூய்மை (உளூ) செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உளூவை முழுமையாகச் செய்யுங்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை. அத்தியாயம் :

571

572அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களைக் கழுவாமல்) கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவ (மஸ்ஹு செய்ய) ஆரம்பித்தோம். (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள் (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அறிவிப்புச் செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

573அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனை தான் என்று கூறினார்கள். அத்தியாயம் :

574முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நீர்குவளையில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த மக்கள் சிலரைக் கண்டார்கள். அப்போது, உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு நரக வேதனைதான் என்று அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

575அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகாலகளுக்கு நரக வேதனைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

576உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். $ அத்தியாயம் :

577அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

578அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன. இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

579நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை புஜம்வரைக் கழுவினார்கள். பிறகு இடக்கரத்தை புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். பிறகு வலக் காலை கணைக்கால் வரைக் கழுவினார்கள். பிறகு இடக்காலையும் (அவ்வாறே) கணைக்கால்வரைக் கழுவினார்கள். பின்னர், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள். மேலும், அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போராய் இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (தம் பிரதான உறுப்புகளை) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக்கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

580

581அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

582

583

584அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் (அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள் என்று கூறினார்கள். மக்கள், உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ளமாட்டாரா, கூறுங்கள் என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தனர். (அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் வாருங்கள் என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படும். அப்போது நான் (இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;அப்புறப்படுத்துவானாக! என்று கூறுவேன்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) பொது மையவாடிக்குப் புறப்பட்டார்கள். (அங்கு போய்) அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்; வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. (அறிந்துகொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக) உறுதியாக என்று காணப்படுகிறது. அத்தியாயம் :

585

586அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள். நான், அபூஹுரைரா (ரலி) அவர்களே! இது என்ன அங்கத் தூய்மை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு அங்கத் தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். அத்தியாயம் :

587

588

589

590ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பல் துலக்குவது என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

591

592

593

594ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை (தஹஜ்ஜுது)க்காக எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தமது வாயைத் தேய்ப்பார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்தால்... என ஹதீஸ் தொடங்குகிறது; இரவுத் தொழுகைக்காக எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

595ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தம் வாயைத் தேய்ப்பார்கள். இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

596இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப்பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள். பிறகு திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும்... என்று தொடங்கி நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக என்பதுவரை இந்தக் குர்ஆன் வசனங்களை (3:190,191)ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குள் திரும்பிவந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். பிறகு எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி இந்த (3:190,191) வசனங்களை (மீண்டும்) ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் நின்று தொழுதார்கள். அத்தியாயம் :

597நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: இயற்கை மரபுகள் ஐந்தாகும் அல்லது ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (-இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும். (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

598அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக்கத்தியைப் பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவைதாம் அவை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

599அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

600

601இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :

602

603

604அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள். குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அறிவிப்பாளர் ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள், தம் தந்தை அபூஸாயிதா (ரஹ்) அவர்கள்தாம் அந்த பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

605

606

607அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணைவைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.) அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மலஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக்குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்,கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இணைவைப்பாளர்கள் (சார்பாக ஒருவர்) உங்கள் தோழர் (நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்கு மலஜலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத்தருவதாக நான் கருதுகிறேன் என்று கூறின(ô)ர். அதற்கு நான் ஆம்(உண்மைதான்);எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக்கூடாதென்றும் (மலஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும், கெட்டிச்சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்கள் என்றேன். அத்தியாயம் :

608

609நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள். இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்;அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

610

611

612இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸ் உள்ள) ஷாம் நாட்டின் திசையை முன்னோக்கியபடியும் கிப்லா(கஅபா)வைப் பின்னோக்கியபடியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :

613

614

615அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஒருவர் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம் என்றும், (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது) வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம் என்றும், வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

616

617

618

619

620

621

622ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம் (இது குறித்து), இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,ஆம் (செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள் என்று பதிலளித்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (காலுறைகள் மீது மஸ்ஹு செய்து தொழலாம் எனும்) இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே அமைந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (குர்ஆனில்) 5:6 ஆவது வசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஈசா பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்து வந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் அல்மாயிதா எனும் (5ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

623

624

625

626

627

628

629முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், முஃகீரா! தண்ணீர் குவளையை எடுங்கள்! என்று கூறினார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அப்போது அவர்கள், கைப் பகுதி குறுகலான ஷாம் நாட்டு நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப்போனார்கள். ஆனால்,சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் அவர்களின் (கை, கால்கள்)மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)விட்டுப் பின்னர் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

630முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களைச் சந்தித்தேன். அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்) கைகளைக் கழுவிவிட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவப்போனபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்தது. எனவே, தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்; தம் காலுறைகள் மீதும் (அவ்வாறே ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுவித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

631

632

633

634

635

636

639ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள் என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும்,உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், தமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ர் பின் கைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அன்னாரைப் பாராட்டுவார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு காணப்படுகிறது: ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள், அலீ அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னைவிட அவர்தாம் இதுகுறித்து நன்கறிந்தவர் என்று கூறினார்கள். ஆகவே, நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மேற்கண்டவாறு அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

640

641

642புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

643

644

645

646

647நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் பாத்திரத்திற்குள் கையை இடுவதற்கு முன் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், இரவில் அவரது கை எதில் கிடந்தது என்பதை அவர் அறியமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அந்த அனைத்து அறிவிப்புகளிலும் கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இட வேண்டாம்) என்றே (பொதுவாக) வந்துள்ளது. ஜாபிர் (ரலி), சயீத் பின் முஸய்யப் (ரஹ்), அபூசலமா (ரஹ்), அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்), அபூசாலிஹ் (ரஹ்),அபூரஸீன் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புக்களில்தான் மூன்று முறை கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இடவேண்டாம்) எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :

648

649

650

651

652

653அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும் நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மற்றவர்களது அறிவிப்பில் விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :

654

655ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

656

657ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீ சிறுநீர் கழிக்காதே! பின்னர் அதில் குளிக்காதே! அத்தியாயம் :

658நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

659

660அபுஸ் ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவர் பெருந்துடக்கு உள்ளவராய் இருக்கும்போது தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது நான், அவர் என்ன செய்ய வேண்டும், அபூஹுரைரா அவர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர் (அதிலிருந்து) தண்ணீரை அள்ளிக் குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. $ அத்தியாயம் :

661

662

663

664நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அது அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார்கள். அதைக் கழுவவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

665ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால்குடி மாறாத ஓர் ஆண்குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்களது மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றி விட்டார்கள். - மேற்கண்ட (481ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

666உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உணவு உட்கொள்ளாத (பால்குடி மாறாத) என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டுவந்து அவர்களது மடியில் வைத்தேன். அது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது) சிறுநீர் கழித்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுநீர் பட்ட இடத்தில்) தண்ணீரைத் தெளித்துவிட்டதைத் தவிர வேறொன்றும் கூடுதலாகச் செய்யவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதை (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்துவிட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

667உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டவரும் ஆரம்பமாக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பெண்மணிகளில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரான உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் மகவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அக்குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள். அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை. அத்தியாயம் :

668அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

669

670

671

672

673

674அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்துவிட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள், உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்யக் காரணமென்ன? என்று கேட்டார்கள். நான்,தூங்கக்கூடியவர் கனவில் எதைக் காண்பாரோ அதை நான் கண்டேன் என்று கூறினேன். அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியம் பட்டிருக்கக்) கண்டீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்தாலும்கூட அதைக் கழுவத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான்விடுவேன் (கழுவமாட்டேன்) என்று கூறினார்கள். அத்தியாயம் :

675

676

677இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள். பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

678

ஆதாரம்: Sahih Muslim

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath