ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 7 · Rubbing hands and feet with dust (Tayammum)

334நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனூ முஸ்த-க் போரின் பயணத்தில்) அவர் களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்தபோது. எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட் டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்க ளும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; (அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.) அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, “(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்- என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் ‘தயம்மும்’ உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத் தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன)” என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணா மற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது. அத்தியாயம் :

335நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப் பெற்றுள்ளன. 1. (எதிரிகளுக்கும் எனக்கும் இடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந் தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. 2. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்கேனும் தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால், (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுதுகொள்ளட்டும். 3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அவை அனுமதிக்கப் படவில்லை. 4. (மறுமையில் என் சமுதாயத்தாருக் காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பெற்றுள்ளேன். 5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற் கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள் ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

336உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்த-க் போர் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. (இதையறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் தேடுவதற்காக) ஒருவரை (நண்பர்களுடன்) அனுப்பிவைத்தார்கள். அவரும் அதை(த் தேடி)க் கண்டுபிடித்தார். (இதற்கிடையே தேடிப்போன) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யாமலேயே) தொழுதுவிட்டார்கள். (திரும்பி வந்ததும்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போதுதான் ‘தயம்மும்’ தொடர்பான வசனத்தை (4:43) அல்லாஹ் அருளினான். ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களுக்கு நேரும்போதெல்லாம் அதில் உங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு நன்மையை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :

337இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான மைமூனா (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான அப்துல்லாஹ் பின் யசார் (ரஹ்) அவர்களும் நானும் அபுல்ஜுஹைம் பின் அல்ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல்ஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) ‘பிஃரு ஜமல்’ பகுதியி-ருந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து முகமன் (சலாம்) சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உடனடியாக பதில் முகமன் சொல்லாமல், ஒரு சுவர் பக்கம் போய் (அதில் தமது கையை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து)கொண்ட பின்னர் அவருக்கு பதில் முகமன் கூறினார்கள்.4 அத்தியாயம் :

338அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. ஆனால், (குளிப்பதற்கு) எனக் குத் தண்ணீர் கிடைக்கவில்லை (இந் நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “நானும் நீங்களும் ஒரு (போர்ப்) பயணத்தில் இருந்தோம்; அப்போது (பெருந்துடக்கு ஏற்பட்ட நமக்குக் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே,) நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்குப் பதிலாக ‘தயம்மும்’ செய்வதைப் போன்று, குளியலுக்குப் பதிலாக) மண்ணில் புரண்டெழுந்து தொழுதேன். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள்வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து ‘இவ்வாறு செய்திருந்தால் அது உமக்குப் போதுமே’ எனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார்கள்.5 அத்தியாயம் :

339அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் இங்கே இடம்பெறுகிறது. மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் தம்மிரு கைகளால் தரையில் அடித்து அவ்விரு கைகளையும் தம் வாயருகே கொண்டுசென்று (ஊதிவிட்டுப்) பின்னர் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவி(க்காட்டி) னார்கள் என்பதும் இந்த அறிவிப்பில் கூடுதலாக இடம்பெறுகிறது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “தூய்மையான மண் ஒரு முஸ்லிம் அங்கத் தூய்மை செய்வதற்கான பொருளாகும். தண்ணீர் இல்லாதபோது அதுவே அவருக்குப் போதும்” என அம்மார் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :

340அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அம்மார் (பின் யாசிர்-ர-) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நாம் ஒரு படைப் பிரிவில் இருந்தோம். அப்போது நமக்கு பெருந் துடக்கு ஏற்பட்டது என(த் தொடங்கி மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே) கூறினார்கள். மேலும், (அவ்விரு கைகளிலும் ‘ஊதினார்கள்’ என்பதற்குப் பதிலாக) தம்மிரு கைகளிலும் துப்பி(யதைப் போன்று வேகமாக ஊதி)னார்கள்’ என இடம் பெற்றுள்ளது. இதை சயீத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

341அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அம்மார் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “மண்ணில் புரண்ட நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்த தைத் தெரிவித்)தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முகமும் (மணிக்கட்டுவரை) இரு கைகளும் உமக்கு (தயம்மும் செய்யப்) போதும்” என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள். அத்தியாயம் :

342மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

343அம்மார் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கையைத் தரையில் அடித்துத் தமது முகத்தையும் (மணிக்கட்டுவரை) இரு கைகளையும் தடவி(க்காட்டி)னார்கள். அத்தியாயம் :

344இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் இறுதி நேரத்தில் (ஓரிடத்தில் இறங்கி) சிறிது நேரம் உறங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான உறக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த உறக்கத்தி-ருந்து) எங்களை (காலை நேர) சூரிய வெப்பம்தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னவர் ஆவார். அதற்கடுத்து இன்னவர். அதற்கடுத்து இன்னவர். -(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூரஜாஉ (இம்ரான் அல்உதாரிதீ-ரஹ்) அவர்கள் அம்மூவரின் பெயரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அவரிடமிருந்து கேட்டு அறிவிப்பவரான அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார்கள்.- நான்காவதாக உறக்கத்தி-ருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்தி-ருந்து யாரும் எழுப்பமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச் செய்தி ஏதேனும் வருகிறதா?) என்பது எங்களுக் குத் தெரியாது. (எனவேதான், அவர்களை யாரும் எழுப்பமாட்டார்கள்.) உறக்கத்தி-ருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து, மக்களுக்கு ஏற்பட்டு விட்ட (அதிகாலைத் தொழுகை தவறிப்போன துயர) நிலையைப் பார்த்தபோது, (எல்லாரையும் எழுப்ப) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று உரத்த குர-ல் ‘தக்பீர்’ சொன்னார்கள். - உமர் (ரலி) அவர்கள் நெஞ்சுரம் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.- எனவே, தொடர்ந்து உரத்த குர-ல் ‘தக்பீர்’ சொல்-க்கொண்டேயிருந்தார்கள். அவர்களது சப்தத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும் விழித்தெழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிரச்சினையில்லை’ அல்லது ‘பிரச்சினை ஏற்படாது’; இங்கிருந்து புறப்படுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தி-ருந்து) இறங்கினார்கள். அங்கத் தூய்மை செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்- அங்கத் தூய்மை செய்தார்கள். (சுப்ஹு) தொழுகைக்காக (பாங்கு சொல்-) அறிவிப்பு செய்யப்பட்டபின் (தவறிய அந்தத் தொழுகையை) மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது, அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களைவிட்டு ஒதுங்கியிருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள். அவர், “எனக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் மண்ணில் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள். அது போதும் உங்களுக்கு” என்று சொன் னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் பயணத் தைத் தொடர்ந்தார்கள். அவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்பட்டுள்ள தாக முறையிட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தி-ருந்து இறங்கி, இன்ன மனிதரை அழைத்தார்கள் - அவருடைய பெயரை அறிவிப்பாளர் அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அடுத்த அறிவிப் பாளர் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அதை மறந்துவிட்டார் - (அவருடன்) அலீ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “நீங்கள் இருவரும் சென்று, தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப்பாருங்கள்” என்றார்கள். அவ்வாறே, அவர்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்டபடி) தமது ஒட்டகத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கிவிட்டனர்” என்று கூறினாள். “அப்படியானால் நீ நட!” என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் ‘எங்கே?’ என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ‘அல்லாஹ்வின் தூதரிடம்’ என்று கூறினர். “மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடமா?” என்று அப்பெண் கேட்டாள். “நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில் தான்; நட” என்று கூறிவிட்டு, அப்பெண்ணை அவர்களிருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர். மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத் தி-ருந்து இறங்குமாறு கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்- அவ்விரு தோல் பைகளின் வாய் வழியாகத் தண்ணீரைப் பாத்திரத்தி னுள் நிரப்பினார்கள். பிறகு அந்தத் தோல் பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, தண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய் களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே “தண்ணீர் புகட்டுங்கள்; நீங்களும் பருகுங்கள்” என அறிவிக்கப் பட்டது. அவ்வாறே நாடிய சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக்கொண்டனர். நாடிய சிலர் தாமே பருகினர். அதன் இறுதியாக பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி, “(இந்தத் தண்ணீரை எடுத்துச்) சென்று, உங்கள்மீது ஊற்றிக்(குளித்துக்)கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிலிருந்து தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது. அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிடக் கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல் பையி-ருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) “இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருட்களை) திரட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங் கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (ஏராளமான) உணவுப் பண்டங்களைத் திரட்டி(க் கொண்டுவந்து), அவற்றை ஒரு துணியி-ட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்தில் அமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர். பிறகு அப்பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள், “தெரிந்துகொள்: உனது தண்ணீரி-ருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கி யதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் பருகக்கொடுத்தான்” என்று கூறினார்கள். பிறகு அப்பெண் தன் குடும்பத்தாரி டம் தாமதமாக வந்துசேர்ந்தார். அவர்கள், “இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழித்துவருகிறாய்?” என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண், “ஓர் அதிசயம் (என்னை விரைவாக வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது). இரு ஆண்கள் என்னைச் சந்தித்து ‘மதம் மாறியவர்’ என்று கூறப்படுகிறதே அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார்” என்று கூறிவிட்டு, அப்பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையே உள்ளவர்களில் மிக வசீகரமான ஒரு மனிதராக அவர் இருந்தார்” அல்லது “உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்” என்று கூறினாள். அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணை வைப்பாளர்களுக்கும் முஸ்-ம்களுக்கும் இடையே போர் நடந்தபோது, அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, ஒரு நாள் அப்பெண் தன் கூட்டத்தாரிடம், “இந்த மக்கள் வேண்டு மென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகிறார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு விருப்பம் உண்டா?” என்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஸாபிஉ’ எனும் சொல்-ன் வினைச் சொல்லான) ‘ஸபஅ’ என்பதற்கு ‘ஒரு மதத்தி-ருந்து வெளியேறி இன்னொரு மதத்திற்குச் சென்றார் (மதம் மாறினார்)’ என்பது பொருளாகும். அபுல்ஆ-யா (ரஃபீஉ பின் மிஹ்ரான் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஸாபியீன்’ என்போர், ‘ஸபூர்’ (வேதத்தை) வாசித்துவந்த வேதக்காரர் களில் ஒரு பிரிவினர் ஆவர். அத்தியாயம் :

345அபூவாயில் (ஷகீக் பின் சலமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(குளியல் கடமை யான ஒருவருக்குத்) தண்ணீர் கிடைக்கா விட்டால், அவர் தொழ வேண்டா மல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(ஆம்; தொழ வேண்டிய தில்லை.) இந்த விஷயத்தில் நான் சலுகையளித்தால், சிறிது குளிர் இருந்தால் கூட (அதைக் காரணம் காட்டி) மக்கள் இப்படி - தயம்மும் - செய்து கொண்டு தொழ ஆரம்பித்துவிடுவார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “அப்படியானால், அம்மார் (பின் யாசிர்- ர-) அவர்கள், உமர் (பின் அல்கத்தாப் -ர-) அவர்களிடம் சொன்ன (‘தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்தால் போதும்’ என்பது பற்றிய) கூற்று எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மாரின் சொல்லைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் மனநிறைவு கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். அத்தியாயம் :

346ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோர் அருகில் நான் இருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு (குளிக்க) தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “தண்ணீர் கிடைக்கும்வரை அவர் தொழ வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூசா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் ‘(தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக இருந்திருக்கும்’ என்று சொன்னதாக அம்மார் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியைத் தம்மிடம் கூறியபோது உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “அம்மாரின் சொல்லை விடுங்கள். (“உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது, சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” எனும்) இந்த (5:6) இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும், பெருந்துடக்குடையவர் தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்துகொள்ளலாம்’ எனும்) இவ்விஷயத்தில் மக்களுக்கு நாம் சலுகையளித்தால், யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால்கூட அங்கத் தூய்மை செய்வதை விட்டுவிட்டு ‘தயம்மும்’ செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்படியானால் “(மக்கள் குளிருக்காக ‘தயம்மும்’ செய்துவிடுவார்கள் எனும்) இந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அந்தச் சலுகையை வழங்க) வெறுத்தார்கள் என்கிறீர்களா?” என்று ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (அதற்காகத்தான் வெறுத்தார்கள்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

347ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்ட ஒரு மனித ருக்கு ஒரு மாத காலம்வரை தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ‘தயம்மும்’ செய்யா மலும் தொழாமலும் இருந்துவிட வேண்டி யதுதானா? அப்படியானால் ‘அல்மாயிதா’ அத்தியாத்தில் வரும் “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது, சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்து கொள்ளுங் கள்” எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த விஷயத்தில் (மக்களுக்குப் பொதுவாக) அனுமதி அளிக்கப்பட்டுவிடுமானால், தண்ணீர் அவர்களுக்குக் குளிராகத் தெரிந்தால்கூட தயம்மும் செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்றார்கள். -(அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஷகீக் (ரஹ்) அவர்களிடம்,) “இதற்காகத்தான் ‘தயம்மும்’ செய்வதை நீங்கள் வெறுக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு ஷகீக் (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித் தார்கள்.- உடனே அபூமூசா (ரலி) அவர்கள் கேட்டார்கள்: உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்பட வில்லையா? (அச்செய்தி வருமாறு:) அம்மார் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னை ஒரு தேவைக்காக (படைப்பிரி வொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நான் (குளியலுக்குத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். (ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன் னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கையை பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் அதை உதறிவிட்டு, ‘தமது வலக் கரத்தால் இடது புறங்கையை’ அல்லது ‘தமது இடக் கரத்தால் வலது புறங்கையைத்’ தடவினார்கள். பிறகு இரு கைகளால் தமது முகத்தையும் தடவிவிட்டு, “இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும்” என்று கூறினார்கள். (இந்நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மார் சொன்னதில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று (அபூமூசா (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் பின்வரும் கூடுதலான தகவலையும் குறிப்பிட்டுள்ளார்கள்: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் ‘என்னையும் உங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (படைப் பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. அப்போது நான் மண்ணில் (கிடந்து) புரண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் வந்து விஷயத்தைத் தெரிவித்தபோது அவர்கள் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் ஒரேயொரு தடவை தடவிவிட்டு, ‘இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும்’ என்று சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்படவில் லையா?” என்றார்கள். அத்தியாயம் :

348இம்ரான் பின் ஹுஸைன் அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் மக்களுடன் சேர்ந்து தொழாமல் தனியே விலகி இருப்பதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரே! மக்களுடன் சேர்ந்து நீர் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது; (குளிக்க) தண்ணீர் இல்லை (எனவேதான், மக்களைவிட்டு விலகியிருக்கிறேன்)” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மண்ணைப் பயன்படுத்துவீராக. அ(தனால் தயம்மும் செய்வ)தே உமக்குப் போதும்” என்றார்கள். அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath