ஸஹீஹ் அல்-புகாரி 5 · Bathing (Ghusl)
248நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக குளிக்க முற்பட்டால், முத-ல் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார் கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து, அவற்றால், தமது (தலையின்) ரோமக்கால் (பகுதி)களைக் கோதிவிடுவார்கள். பிறகு தமது தலையின் மீது மூன்று முறை கைகளால் தண்ணீரை அள்ளி ஊற்றுவார்கள். பிறகு தமது மேனி முழுவதிலும் தண்ணீரை ஊற்றுவார்கள். அத்தியாயம் :
249நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பெருந்துடக்கிற் காகக் குளிக்கும்போது) தம்மிரு கால்களை விட்டுவிட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். மேலும், தமது மர்ம உறுப்பையும் உட-ல் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள். பிறகு தம் (உடல்)மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று, தம் கால்களைக் கழுவுவார்கள். இதுவே பெருந்துடக்கிற்காக நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையாகும். அத்தியாயம் :
250ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து குளித்தோம். அந்தப் பாத்திரத்திற்கு ‘ஃபரக்‘ என்று கூறப்படும்.3 அத்தியாயம் :
251அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் இல்லத்திற் குச்) சென்றோம், அப்போது அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களின் குளியல் பற்றி (‘அவர்கள் எப்படிக் குளிப்பார்கள்?’ என்று) கேட்டார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸாஉ’ போன்ற ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்-க் குளித்துக்காட்டினார்கள். தமது தலைமீது தண்ணீரை ஊற்றினார்கள். (அது மட்டும் தெரிந்தது) அப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது. இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ஷுஅபா (பின் ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர் களின் ஓர் அறிவிப்பில் (‘ஸாஉ போன்ற’ என்பதற்குப் பதிலாக) ‘ஸாஉ அளவு’ என இடம்பெற்றுள்ளது அத்தியாயம் :
252அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறுசிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். “ஒரு ‘ஸாஉ’ தண்ணீர் போதும்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது” என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உன்னைவிட அதிக முடியுள்ளவரும் உன்னைவிடச் சிறந்தவரு (மான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது” எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அத்தியாயம் :
253இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் துணைவியாரும் என் சிறிய தாயாருமாôன) மைமூனா (ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தி-ருந்து குளிப்பது வழக்கம். ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஸாஉ அளவு(ள்ள பாத்திரத்தி-ருந்து)’ என இடம்பெற்றுள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு அறிவித்ததாகக் கூறுவது வழக்கம். (அவர்கள் குளிக்கும்போது அவர்களைத் தாம் பார்த்ததாக அறிவிக்கவில்லை.) ஆயினும், (என் ஆசிரியர்) அபூநுஐம் (ரஹ்) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பே சரியானதாகும். அத்தியாயம் :
254ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானோ (குளிக்கும்போது) மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன்” என்று கூறி, தம்மிரு கைகளாலும் (தண்ணீர் அள்ளுவதைப் போன்று) சைகை செய்து காட்டினார்கள். அத்தியாயம் :
255ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது தம்மிரு கைகளால் அள்ளி) மூன்று முறை தமது தலையில் தண்ணீர் ஊற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :
256அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் -ஹசன் பின் முஹம்மத் பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்- வந்து, “பெருந்துடக் கிற்காகக் குளிப்பது எப்படி?” என்று கேட்டார். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி, அதைத் தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள்” என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள், “நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே)?” என்று கேட்டார். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்கள் உம்மைவிட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந் ததே?) என்று கூறினேன். அத்தியாயம் :
257நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அப்போது அவர்கள் ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ தமது (முன்)கைகளைக் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையில் தண்ணீரை ஊற்றித் தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது (இடக்) கையை பூமியில் தேய்த்(து சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தமது உடல்மீது (ஒரு முறை) தண்ணீர் ஊறறினார்கள். பிறகு அந்த இடத்தி-ருந்து சிறிது நகர்ந்து நின்று, இரு பாதங்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
258ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக (கடமையான குளியல்) குளிக்கும் போது, பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து (தமது கையில் நீர் அள்ளித்) தமது தலையின் வலப் புறம் ஊற்றுவார் கள்; பிறகு இடப் புறம் ஊற்றுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (நீர் அள்ளி) தலையின் நடுவில் ஊற்றுவார்கள். அத்தியாயம் :
259மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து, பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். பிறகு தமது முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் மூலம் அவர்கள் துடைத்துக்கொள்ளவில்லை.6 அத்தியாயம் :
260மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காகக் குளித்தபோது (முதலில்) தமது மர்ம உறுப்பைக் கையால் கழுவினார்கள். பிறகு கையைச் சுவரில் தேய்த்துக் கழுவி னார்கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
261நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளி) குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறிமாறிச் செல்லும். அத்தியாயம் :
262ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது (முத-ல்) கைகளைக் கழுவிக்கொள் வார்கள். அத்தியாயம் :
263ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்கான குளியலை ஒரே பாத்திரத்தி-ருந்து நிறைவேற்றினோம்.. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
264அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியரில் ஒருவரும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்பார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸ்-ம் (பின் இப்ராஹீம் - ரஹ்), வஹ்ப் (பின் ஜரீர் - ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் தொடர்களில், ‘பெருந்துடக்கிற்காக (குளிப் பார்கள்)’ என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
265நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு முன்கைகள்மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது தண்ணீர் ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைத் தரையில் தேய்த்(துச் சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தையும் ((முழங்கை வரை) இரண்டு கைகளையும் கழுவினார் கள்; தலையை மூன்று முறை (தண்ணீர் ஊற்றிக்) கழுவினார்கள். பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு அந்த இடத்தி-ருந்து சற்றுத் தள்ளி நின்று தமது பாதங்கள் இரண்டையும் கழுவினார்கள். அத்தியாயம் :
266மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து, அவர்களுக்குத் திரையிட்டேன். அப்போது அவர்கள் தமது கையில் தண்ணீர் ஊற்றி, அதை ‘ஒரு முறை’ அல்லது ‘இரு முறை’ கழுவினார்கள் -“அறிவிப்பாளர் சா-ம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் ‘மூன்று முறை’ என்றும் சொன்னார்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரிய வில்லை” என சுலைமான் (பின் மிஹ்ரான் அல்அஃமஷ் - ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். - பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள், பிறகு தமது (இடக்) கையை ‘பூமியில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்துக் கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள்; முகத்தையும் (முழங்கைவரை) இரண்டு கைகளையும் கழுவினார்கள்; தலையையும் கழுவினார்கள்; பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டை எடுத்துக்கொடுத்தேன். அப்போது ‘வேண்டாம்’ என்பதுபோல் தமது கையால் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
267முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அ(ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் வாசனைத் திரவியங் களைப் பயன்படுத்திக் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவனாக இருக்க விரும்ப வில்லை” எனக் கூறிய)து பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் குறிப்பிட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசுவேன். அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்திய உறவு கொண்டு)விட்டு வருவார்கள். பிறகு காலையில் நறுமணம் கமழக் கமழ ‘இஹ்ராம்’ கட்டியிருப்பார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
268கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இரவில், அல்லது பக-ல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். (அப்போது) அவர்களுக்குப் பதினொன்று துணைவியர் இருந்தனர்” என்று கூறினார்கள். உடனே நான், “அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெற்றிருந்தார்களா?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேரின் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக்கொள்வோம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் (ரஹ்) அவர்கள் கத்தாதா (ரஹ்) அவர்களி டமிருந்து அறிவித்துள்ள தொடரில், “(அப்போது) நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
269அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மனைவியாக) இருந்ததால், நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, “(அவ்வாறு பாலுணர்வு கிளர்ச்சி நீர் வெளியேறினால்) அங்கத் தூய்மை செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
270முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவனாக இருப்பதை விரும்புவதில்லை” எனக் கூறியதைக் குறிப்பிட்டு ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேள்வி கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இரவில்) வாசனைத் திரவியங் கள் பூசினேன். அவர்கள் தம் துணைவி யர் அனைவரிடமும் சென்றுவிட்டுப் பின்னர் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவர் களாக இருந்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
271ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தலை வகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன் றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்தார்கள். அத்தியாயம் :
274மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்கி(ன் கடமையான குளிப்பி)ற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் (வாங்கி) வைத்துக்கொண்டு, தமது வலக் கையால் (தண்ணீரை அள்ளி) தமது இடக் கையின் மீது ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ ஊற்றி(க் கழுவி)னார்கள். பிறகு மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையை ‘தரையில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்து ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ (தண்ணீர் விட்டுக்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கை வரை) இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலைக்குத் தண்ணீர் ஊற்றி னார்கள். பிறகு உடலின் மற்றப் பகுதி களைக் கழுவினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் இரு கால்களையும் கழுவினார்கள். நான் (துடைப்பதற்காக) அவர்களிடம் துண்டு ஒன்றைக் கொடுத் தேன். ஆனால், அதை அவர்கள் விரும்பாமல் தமது கையால் தண்ணீரை (வழித்து) உதறலானார்கள். அத்தியாயம் :
275அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு தொழுகைக்காக) ‘இகாமத்’ சொல்லப்பட்டு, தொழுகை அணிகள் சீராக்கப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் இடத்தில் அவர்கள் போய் நின்றபோது, தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு, (தமது வீட்டுக்குத்) திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையி-ருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட எங்களிடம் வந்தார்கள். ‘தக்பீர்’ சொல்- தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
276மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற் காகத் தண்ணீர் வைத்துவிட்டு, ஒரு துணியால் அவர்களுக்குத் திரையிட் டேன். அவர்கள் (முத-ல்) தம் கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி, தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் பாதங்களைக் கழுவி னார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியை எடுத்துக்கொடுத்தேன். ஆனால், அதை அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை; தம் கைகளை உதறிக்கொண்டே சென்றுவிட்டார்கள். அத்தியாயம் :
277ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவி யரான) எங்களில் ஒருவருக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டால், இரு கைகளிலும் மூன்று முறை தண்ணீர் அள்ளி தலைக்கு மேல் ஊற்றிக் குளிப்போம். பின்னர் கையால் தண்ணீர் அள்ளி (தலை முதல் கால்வரை) வலப் பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையால் தண்ணீர் அள்ளி இடப் பக்கம் ஊற்றுவோம். அத்தியாயம் :
278நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே வெறும் மேனியுடன் குளிப்பது வழக்கம். (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். இதனால் “அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குட-றக்க நோயாளியாய் இருப்பதால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை” என பனூ இஸ்ராயீல் சமூகத்தார் (குறை) கூறினார்கள். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்-ன் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து, “கல்லே எனது துணி! கல்லே எனது துணி!” என்று குரல் எழுப்பி(யபடி ஓடி)னார்கள். (ஆடையில்லா கோலத்துடன் பனூ இஸ்ராயீல் சமுதாயம் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) பனூ இஸ்ராயீல் சமுதாயத் தார் மூசா (அலை) அவர்களை (வெறும் மேனியுடன்) பார்த்துவிட்டு, “அல்லாஹ் வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையும் இல்லை” என்று கூறினர். இதன் அறிவிப்பாளரான அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதானையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையி-ருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ‘ஆறு’ அல்லது ‘ஏழு’ தழும்பு கள் அந்தக் கல்-ல் பதிந்துவிட்டன. அத்தியாயம் :
279நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் வெறும் மேனியுடன் குளித் துக்கொண்டிருந்தபோது, தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்று அவர்கள்மீது விழுந்தது. உடனே அய்யூப் (அலை) அவர்கள் அதைத் தமது துணியால் பிடிக்கப்போனார்கள். அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களை அழைத்து, “அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்த(ச் செல்வ) நிலை உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (தன்னிறைவுடைய வராக) வைத்திருக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு “ஆம், உன் வலிமையின் மீதாணையாக! (உண்மைதான்.) ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!” என்று அய்யூப் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
280உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (ஒரு நாள்) நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்களை, (அவர் களுடைய புதல்வி) ஃபாத்திமா திரையிட்டு மறைத்துக்கொண்டிருக்க, அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். (அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன்.) அப்போது அவர்கள் “யார் இவர்?” எனக் கேட்டார்கள். “நான் (அபூதா-பின் புதல்வி) உம்மூ ஹானீ” என்று பதிலளித் தேன். அத்தியாயம் :
281மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காகக் குளித்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுகள்வரைக்) கழுவினார்கள். பிறகு தமது வலக் கையினால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி, தமது மர்ம உறுப்பையும் அதில் பட்டிருந்த (இந்திரியத்)தையும் கழுவினார்கள். பிறகு (அந்தக்) கையை ‘சுவரின் மீதோ’ அல்லது ‘தரையின் மீதோ’ தேய்த்தார்கள். பிறகு இரு கால்களைத் தவிர (உளூவின் மற்ற உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் உடம்பிற்குத் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சிறிது நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
282இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்க-தம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; (விழித்தெழும்போது தன்மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள்மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்.8 அத்தியாயம் :
283அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் நான் மதீனாவின் ஒரு சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்துகொண்டேன். உடனே நான் சென்று குளித்துவிட்டு வந்தேன். அப்போது “(இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நான் பெருந்துடக்கு உடையவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர் வதை நான் வெறுத்தேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்-ம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிடமாட்டார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
284அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்றுவருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். அத்தியாயம் :
285அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருந்துடக்குடன் இருந்த என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து, எனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடன் நான் நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் (அங்கிருந்து) நழுவிச் சென்று இருப்பிடத்துக்குப் போய் குளித்துவிட்டு வந்தேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) “அபூஹுரைரா! எங்கே இருந்தாய்?” என்று கேட்டார்கள். நான் (எனது நிலையை) அவர்களிடம் சொன்னேன். அப்போது, “சுப்ஹானல் லாஹ்! (அல்லாஹ் தூயவன்) அபூ ஹுரைரா! ஓர் இறைநம்பிக்கையாளர் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகிவிட மாட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
286அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் உறங்குவார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்; ஆயினும் (உறங்கும்முன்) அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
287இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் பெருந் துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் உறங்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் ஒருவருக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருந்தாலும், அவர் அங்கத் தூய்மை செய்துகொண்டு உறங்கலாம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
288ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் உறங்க நினைத்தால், தமது மர்ம உறுப்பைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். (அதன் பின்னர் உறங்குவார்கள்.) அத்தியாயம் :
289அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர், தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும்போது (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அங்கத் தூய்மை செய்துவிட்டு (உறங்கலாம்.)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
290அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
291நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்குகிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டி னாலே குளியல் கடமையாகிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
292ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு விந்தை வெளியேற் றாம-ருந்தால் (அவர்மீது குளியல் கடமையாகுமா), கூறுங்கள்?” என்றேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “அவர் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும்; தமது பிறப் புறுப்பைக் கழுவிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். மேலும், “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற் றேன்” என்றும் உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்னர் நான் இது குறித்து அலீ பின் அபீதா-ப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ் வாம் (ரலி), தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோரி டம் கேட்டபோதும் அவர்கள் அனை வரும் இவ்வாறே செய்யும்படி பணித் தார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் செவியுற்றதாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
293உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டார்; ஆனால், விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனைவியின் பிறவி உறுப்பைத் தொட்ட தமது உறுப்பை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை செய்துகொண்டு தொழலாம்” என்று சொன்னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: (பாலுறுப்புகள் சந்தித்துவிட்டால்) குளியல்தான் (மார்க்கத்தில்) தார்மிகக் கடமையாகும். இதுதான் இறுதிக் கட்டளையாகும். இதில் கருத்து வேறுபாடு இருப்பதால்தான் இங்கு குறிப்பிட்டோம்.10 அத்தியாயம் :
ஆதாரம்: Sahih al Bukhari
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath