ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 44 · Khusoomaat

2410அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை நான் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.2 ‘‘நபி (ஸல்) அவர்கள், யிவேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்துவிட்டனர்’ என்று கூறியதாக எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

2411அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், ‘‘உலகத்தார் அனைவரை விடவும் (சிறந்தவராக) முஹம்மத் (ஸல்) அவர்களைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘‘உலகத்தார் அனைவரைவிடவும் (சிறந்தவ ராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தமுஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் விசாரித்தார்கள். அவர் விவரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்துகொண்டபின்) நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகிவிடுவேன். நான்தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை) அவர்கள் (அல்லாஹ்வுடைய) அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா; அல்லது அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) அல்லாஹ் விதிவிலக்கு அளித்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2412அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘‘அபுல்காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அந்தத் தோழர்) யார்?” என்று கேட்டார் கள். அதற்கு அவர், ‘‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரைக் கூப்பிடுங்கள்” என்றார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘‘இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘‘இவர் கடைவீதியில், யிமனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!› என்று ஆணையிட்டுக் கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், யிதீயவனே! முஹம்மத் (ஸல்) அவர்களைவிடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?› என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டுவிட, இவரது முகத்தில் அறைந்துவிட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரைவிட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிவருபவர் களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பவராகக் காண்பேன். யிமூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா; அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2413அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (‘‘ஆம், அவன்தான்” என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். நபி (ஸல்) அவர்கள் அவனது தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனது தலை நசுக்கப்பட்டது. அத்தியாயம் :

2414இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் வியாபாரத்தில் ஏமாற்றப் பட்டுவந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், ‘‘நீ வியாபாரம் செய்தால் (எதையும் விற்றால் அல்லது வாங்கினால்) யிஏமாற்றுதல் கூடாது’ எனச் சொல்லிவிடு” என்று சொன்னார்கள். அதன்படி அந்த மனிதர் (வியாபாரம் செய்யும்போதெல்லாம்) அவ்வாறே கூறிவந்தார். அத்தியாயம் :

2415ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஓர் அடிமையை விடுதலை செய்தார். அவரிடம் அந்த அடிமை யைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், அந்த அடிமையை அம்மனிதர் விடுதலை செய்ததை ரத்துச் செய்தார்கள். (அவருக்காக அவ்வடிமையை ஏலம் விட்டபோது) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அந்த அடிமையை நுஐம் பின் அந்நஹ்ஹாம் (ரலி) அவர்கள் வாங்கினார்கள். (பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் விலையை அடிமையின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டார்கள்.) அத்தியாயம் :

2416‘‘ஒருவன் ஒரு முஸ்லிமு டைய செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய் வானாயின், மறுமையில் தன்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும்போது கேட் டுக்கொண்டிருந்த அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறலானார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இது நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்துவிடவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘‘(அப்படியென்றால் யிநிலம் என்னுடையதுதான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதர் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்றுவிடுவாரே!” என்று கூறினேன். (அப்போதுதான் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களுடன் அல்லாஹ் பேசவும்மாட் டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (3:77) எனும் குர்ஆன் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :

2418கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரி டையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்கி) இருவரின் குரலும் உயர்ந்து விட்டது. வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைச் செவியுற்றுவிட்டார்கள். பிறகு தமது அறையின் திரையை நீக்கி எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டு வந்து, யிகஅபே!› என்று அழைத்தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும்படி (விரலால்) சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘எழுந்து சென்று (மீதிக்) கடனை அடைப்பீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2419உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் (குர்ஆனின்) அத்தியாயம் ‘அல்ஃபுர்காû” நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி யிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி) அவர்களைக் கண்டிக்க முற் பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்றஅங்கி)யை அவர்களுடைய கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் எனக்கு ஓதிக்கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை நான் கேட்டேன்” என்று கூறி னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு ஹிஷாம் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். அவர் ஓத, அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று” என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, ‘‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின்படி அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, உங்களுக்கு எளிதானதை அதிலிருந்து ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2420நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தொழுகையை (நிறைவேற்றுமாறு) கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது (கூட்டுத்) தொழு கையில் கலந்துகொள்ளாத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2421ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களி டம் வழக்கொன்றைக் கொண்டுவந்தனர். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (உத்பா பின் அபீவக்காஸ்), ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்” என்று சொன்னார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் அதிகாரத்தில் அவள் இருந்தபோது பிறந்தவர்” என்று கூறினார்.5 அந்த அடிமைப் பெண்ணின் மகனி டம் (சஅதுடைய சகோதரர் உத்பாவின்) சாயலைத் தெளிவாகக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.6 பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக்கொள்.)” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :

2422அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிநஜ்த்’ மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பிவைத் தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான ‘ஸுமாமா பின் உஸால்’ எனப்படும் ஒரு மனிதரைப் பிடித்து வந்தார்கள். அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, ‘‘ஸுமாமாவே, உம்மிடம் என்ன (செய்தி) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘முஹம்மதே! என்னிடம் நல்ல செய்திதான் உள்ளது” என்று கூறினார். தொடர்ந்து ஹதீஸைக் கூறினார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுமாமாவை அவிழ்த்து விட்டுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.9 அத்தியாயம் :

2423அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்த் மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்று அழைக்கப் படுபவரைப் பிடித்து வந்தார்கள். (மக்கள்) அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தார்கள். அத்தியாயம் :

2424கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பள்ளிவாசலில்) சந்தித் தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வற்புறுத்தலானேன்.) நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, ‘‘கஅபே!” என்றழைத்து, ‘‘பாதியை (வாங்கிக்கொள்)” என்று கூறுவது போல் தமது கையால் சைகை செய்தார்கள். எனவே, நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து) விட்டு விட்டேன். அத்தியாயம் :

2425கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். எனக்கு ஆஸ் பின் வாயில் என்பவர் சில திர்ஹங்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அவற்றைக் கொடுத்துவிடும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனது கடனைத் தரமாட்டேன்” என்று கூறினார். நான், ‘‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும்வரை நான் முஹம்மதை நிராகரிக்கமாட்டேன்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப் படும்வரை என்னை விட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்” என்று கூறினார். அப்போதுதான், ‘‘எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டேயிருக் கும்’ என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்துகொண்டானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக்கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்...” (19:77லி80) எனும் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.10 அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath