ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 42 · Distribution of Water

2351சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘‘சிறுவரே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அந்த மீதியை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :

2352அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டில் வளர்ந்த ஆடு ஒன்றின் பாலை அவர் களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத் தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்சி, ‘‘உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்துவிடுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, ‘‘(முதலில்) வலப் பக்கம் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப் பக்கம் இருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)” என்று சொன்னார் கள். அத்தியாயம் :

2353அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீ ரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்த தாகிவிடும்.4 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2354அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்குமேல் உள்ள புற்பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2355அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுரங்க (விப)த்துக்கு இழப்பீடு கிடை யாது; வாயில்லாப் பிராணி(களால் ஏற்படும் இழப்பு)களுக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2357அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன்மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்க வும்மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது” (3:77) எனும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் வந்து (மக்களை நோக்கி), ‘‘அபூஅப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கி யது. என் தந்தையின் சகோதரர் மகனு டைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?› என்று கேட்டார்கள். நான், ‘‘என்னிடம் சாட்சிகள் இல்லை” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையதுதான்’ என்று) சத்தியம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். நான், ‘‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே” என்று கூறினேன். அப்போதுதான், நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2358அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத் தவும்மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீ ரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்துகொண்டவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தி யடைவான்; கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்வான். மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன்” என்று கூறி, அதை ஒரு மனிதர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.6 இதைக் கூறிவிட்டு, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை யும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ...” (3:77) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2359அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரி தோழர், ‘‘தண் ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி தோழர் கோபம் கொண்டு, ‘‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?” என்று கேட்டார்.7 இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடை யும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறி விட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர், நீங்கள் அளிக் கின்ற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்’ எனும் (4:65) திருக் குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

2361உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஓர் அன்சாரி தோழருடன் (பேரீச் சந்தோப்புக்கு நீர் பாய்ச்சும் விஷயத்தில்) சச்சரவு ஏற்பட்டது. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம் இந்த விஷயம் தீர்ப்புக்காகச் சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! (மேட்டிலிருக்கும் உங்கள் தோப்புக்குத்) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு (அதை அன்சாரியின் தோப்புக்கு) அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே அன்சாரி தோழர், ‘‘அவர் உங்கள் அத்தை மகன் ஆயிற்றே! (அதனால் தான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறீர்கள்”) என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! வரப்பை அடையும்வரை நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு (பின்னர் அன்சாரியின் தோப்புக்கு) அதைத் திறந்து அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘திருக்குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்துத்தான் இறங்கியது என நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2362உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமி டத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம்மிடம் இந்த வழக்கு வந்தபோது), ‘‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டையதோப்பு)க்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, ‘‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?” என்று கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும்வரை தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் (பிறகு விட்டுவிடுங்கள்)” என்று கூறி, ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘ ‘(உங்கள் மரங் களுக்கு) நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்’ எனும் (இந்த) நபிமொழியை அடிப்படை யாகக் கொண்டுதான், யிதண்ணீர் கணுக்கால் கள்வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்ட தாகப் பொருள்’ என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டுக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

2363அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) யிஎனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதை வாயால் கவ்விக்கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அவருடைய இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்றும் பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமை யில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2364அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன் னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், ‘‘இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப்போகிறேனோ?› என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக்கொண்டிருந்தது. ‘‘இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனை செய்யப்படு கிறாள்?)” என்று நான் கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), ‘‘இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் சாகும்வரை இந்தப் பெண் கட்டிவைத்திருந்தாள்” என்று பதிலளித்தனர்.8 இந்த அறிவிப்பின் இடையே, ‘ ’ ‘அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்” என அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

2365அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனை செய்யப்பட்டாள். அந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்துவைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது லிஅல்லாஹ்வே மிக அறிந்தவன்லி ‘‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட் டும் என்று அதை அவிழ்த்துவிடவு மில்லை” என்று அல்லாஹ் கூறினான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2366சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (பானம் உள்ள) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது, அவர்களின் வலப் பக்கம், மக்களில் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இடப் பக்கம் முதியவர்கள் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக்கூடிய எனது பங்கை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :

2367நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன்மீது ஆணையாக! (தனது குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமை யில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்க விருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர் களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன்.9 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2368நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (நபி) இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாருக்கு (ஹாஜருக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்) விட்டுவிட்டிருந்தால் லி (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) லி தண்ணீரைக் கையால் அள்ளாமல் இருந் திருந்தால் லி அது (நிற்காமல்) ஓடுகின்ற நீரோடையாக இருந்திருக்கும். (பிறகு) யிபனூ ஜுர்ஹும்’ குலத்தார் அங்கு வந்து, ‘‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக்கொள்ள நீங்கள் அனுமதிப் பீர்களா?” என்று (ஹாஜரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘சரி; (தங்கி வசித்துக்கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத்) தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது” என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார், ‘‘சரி (அவ்வாறே ஒப்புக்கொள்கிறோம்)” என்று கூறினார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2369நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான். (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்தபோது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப்பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவருடைய செல் வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிக்க விடாமல்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2370அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் கிடையாது” என்று கூறினார்கள். இதை ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) யிநகீஉ’ எனுமிடத் தைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக ஆக்கியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘ஷரஃப்’ மற்றும் யிரபதா’ எனுமிடங்களைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந் தார்கள் என்று நமக்குச் செய்தி கிட்டியுள் ளது” என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.10 அத்தியாயம் :

2371அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிட மிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமை யாகும். அதை இறைவழியில் பயன்படுத்து வதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில், அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவ னிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில், அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடு களைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாள ருக்கு இல்லாமல் இருந்தாலும், அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். (இவ்விதம் நல்ல நோக்கங்களுக்காக வளர்க்கப்படும்) இந்தக் குதிரை அவருக்கு (மறுமையில்) நற்பலன் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும். இன்னொருவர், தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (விற்பனை வருமானத் திற்கான ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது சுமத்தும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு (அவரு டைய) அந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத் தால், அது அவனுக்குப் பாவச்சுமையாக ஆகிவிடுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கழுதைகள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்த இறைக்கட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; யிஎவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனை யைக்) கண்டுகொள்வான்’ (99:7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2372ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லிக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்துவிடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘(பிறரது) தொலைந்துபோன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்...)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குச் சொந்தமானது; அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது; அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘தொலைந்துபோன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (குடலும்) அதன் கால்குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக்கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக்கொள்ளும்வரை. (ஆகவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு)” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2373நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்து விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரது முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்றுவதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்தததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம். இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2374அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் விறகு (சேகரித்து அதன்) கட்டு ஒன்றை முதுகில் சுமந்து (விற்கச்) செல்வது, அவர் ஒருவரிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில், (அப்படிக் கேட்கும்போது) அவர் இவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2375அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கிடைத்த பொருட்களில் (எனது பங்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கூட்டாக வயது முதிர்ந்த ஓர் ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருந்தார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். யிஇத்கிர்’ புல்லை விற்பதற்காக அதன்மீது ஏற்றிக் கொண்டுவர நான் விரும்பியிருந்தேன். அப்போது யிபனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டுவர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம்புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், ‘‘ஹம்ஸாவே! இதோ! வயதான கொழுத்த ஒட்டகங்கள்! (இவற்றை அறுத்து விருந்தாளிகளுக்குப் பரிமாறிவிடுங்கள்)” என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்துக்கொண்டார்கள். அருவருப்பூட்டிய அந்தப் பயங்கரக் காட்சியை நான் கண்டேன். உடனே நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி (ஸல்) அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் பின் ஹாரிஸா அவர் களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தமது கோபத்தை நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தமது பார்வையை உயர்த்தி, ‘‘நீங்கள் என் முன்னோர்களின் அடிமை கள்தானே?” என்று கூறினார்கள்.12 இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரைவிட்டு அப்படியே பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார் கள். இந்த நிகழ்ச்சி மது தடை செய்யப்படு வதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களிடம், ‘‘திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா (ரலி) அவர்கள்) எடுத்துக்கொண்டார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்” என்று கூறினார்.13 அத்தியாயம் :

2376அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார் கள்.15 அதற்கு அன்சாரிகள், ‘‘(அல்லாஹ் வின் தூதரே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர் களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம்)” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அன் சாரிகளே!) எனக்குப்பின் (சிறிது காலத்திற் குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்)வரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள்” என்று சொன்னார் கள். அத்தியாயம் :

2377அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந் தால் எங்களுடைய குறைஷி சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகின்ற அளவுக்கு) மானிய நிலங்கள் அப்போது நபி (ஸல்) அவர்களி டம் இருக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிட மற்றவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர் கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று (அன்சாரிகளி டம்) கூறினார்கள்.16 அத்தியாயம் :

2378நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பெண் ஒட்டகத்தின் உரிமைகளில் நீர் நிலையருகே அதன் பாலைக் கறப்பதும் ஒன்றாகும்.17 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2379அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் எவர் பேரீச்ச மரங்களை வாங்கினாரோ, அவர் (அதை வாங்கியபோது அந்த போக விளைச்சல் தமக்கே சேர வேண்டு மென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியது. எவர் செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்குகிறாரோ, (அந்தச் செல்வம் தமக்கே சேர வேண்டும் என்று) வாங்கியவர் நிபந்தனையிட்டிருந்தால் தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே சேரும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அடிமை தொடர்பான இந்த ஹதீஸ் உமர் (ரலி) அவர்களாலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்தியாயம் :

2380ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, ‘அராயா’ (இரவல்) மரத்திலுள்ள கனிகளை (ஐந்து யிவஸ்க்’கு களுக்கும் குறைவான அளவில்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதியளித் தார்கள். அத்தியாயம் :

2381ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முகாபராவையும், முஹாகலாவையும், முஸாபனாவையும், பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள். மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் (இரவல் மரங்கள்) மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித் தார்கள்.19 அத்தியாயம் :

2382அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அராயா’ (இரவல்) வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக ஐந்து யிவஸ்க்’குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்துகொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள், யிஐந்து வஸ்க்குகளுக்கும் குறைவாகவா; ஐந்து வஸ்க்குகளுக்கா’ என்று சந்தேகப்படுகிறார்கள்.20 அத்தியாயம் :

2383ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள் (மரத் திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற்பதைத் தடை செய்தார் கள்); ‘அராயா’காரர்களைத் தவிர. நபி (ஸல்) அவர்கள், ‘அராயா’காரர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட (முஸாபனா) வியாபாரம் செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்: ‘‘புஷைர் (ரஹ்) அவர்கள் இதைப் போன்றதை (ஹதீஸை) எனக்கு அறிவித் தார்கள்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath