ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 34 · Sales and Trade

2047அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!” என்று கூறுகிறீர்கள். ‘‘முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அவர்கள் (அதிகமாக) அறிவிப்பதில்லையே!” என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வணிகத்தில் ஈடுபட்டி ருந்தனர். நான் யிஎன் வயிறு நிரம்பினால் போதும்’ என்று நபி (ஸல்) அவர்களுட னேயே இருந்துவந்தேன். அவர்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும் போதும் நான் (அல்லாஹ்வின் தூதருட னேயே) இருப்பேன்; அவர்கள் (நபிமொழி களை) மறந்துவிடும்போது நான் நினைவில் வைத்திருப்பேன். என் அன்சாரி சகோதரர் கள் தங்கள் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்; நான் திண்ணை ஏழைத் தோழர்களில் ஓர் ஏழையாக இருந்தேன்; அவர்கள் மறந்துவிடும் வேளையில் (நபி (ஸல்) அவர்களின் போதனைகளை) நான் ம”ம் செய்துகொள்வேன். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்த போது, ‘‘நான், எனது இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை யார் தமது துணியை (மேல்துண்டை) விரித்து வைத்திருந்து, பிறகு அதைத் தம்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க்கொள்கிறாரோ அவர் நான் சொல்பவற்றை ம”ம் செய்யாமல் இருக்கமாட்டார்” எனக் கூறினார்கள். நான் என்மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து(அணைத்து)க்கொண்டேன்; (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதையும் நான் மறக்கவில்லை. அத்தியாயம் :

2048அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத் துவத்தை ஏற்படுத்தினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘நான் அன்சாரிகளிலேயே அதிகமான செல்வம் உடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவிய ரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கி றேன். அவரது யிஇத்தா’ (காத்திருப்புக் காலம்) முடிந்ததும் அவரை உமக்கு மணமுடித்துத்தருகிறேன்” எனக் கூறினார். அப்போது நான், ‘‘இது எனக்குத் தேவையில்லை. வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ‘‘கைனுகா எனும் சந்தை இருக்கிறது” என்றார். நான் (அடுத்த நாள்) காலை அங்கு சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) அடையாளத்துடன் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் மண முடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘யாரை?” என்றார்கள். ‘‘ஓர் அன்சாரிப் பெண்ணை” என்றேன். ‘‘எவ்வளவு யிமஹ்ர்’ (மணக்கொடை) கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். ‘‘ ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்கு லிஅளவுக்குலி தங்கம்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்றார்கள். அத்தியாயம் :

2049அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி னார்கள். சஅத் (ரலி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘எனது செல்வத்தைச் சரிபாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன்; (என் மனைவியரில் ஒருவரை மணவிலக்குச் செய்து) உமக்கு மண முடித்துத்தருகிறேன்” எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்) வழங்குவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்” எனக் கூறினார்கள். (அதன்படி சந்தைக்குச் சென்று) அவர்கள் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, தாம் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டுவந்தார்கள். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார் கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘என்ன விசேஷம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ûணை மணமுடித்துக்கொண்டேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தீர்?› எனக் கேட்டார்கள். ‘‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

2050இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உ(க்)காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வணிகம் செய்வதை மக்கள் பாவம் எனக் கருதினர். அப்போதுதான், ‘‘(ஹஜ்ஜின்போது வணிகம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள்மீது குற்றமன்று” (2:198) எனும் வசனம் அருளப் பெற்றது.2 இவ்வசனத்துடன் ‘ஹஜ் காலங்களில்’ (ஃபீ மவாசிமில் ஹஜ்) என்பதையும் சேர்த்தே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியிருக்கிறார்கள். அத்தியாயம் :

2051நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவை இரண்டுக்கு மிடையே சந்தேகத்திற்கிடமான சில செயல்களும் உள்ளன. யார் பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை கைவிடுகிறாரோ அவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் கைவிடுவார்; யார் பாவம் எனச் சந்தேகிக்கப்படுபவற்றைச் செய்யத் துணிகிறாரோ அவர் (பாவம் என்று) தெளிவாகத் தெரிகின்றவற்றிலும் சிக்கிக்கொள்ளக்கூடும். பாவங்கள் அல்லாஹ்வின் வேலிகளாகும். யார் வேலியைச் சுற்றி மேய்கிறாரோ அவர் அதற்குள்ளேயே சென்றுவிடக்கூடும்.3 இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2052உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கறுப்பு நிறப் பெண் ஒருவர் (என்னி டம்) வந்து, எனக்கும் என் மனைவிக்கும், தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார்; இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை: பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு, ‘‘இவ்வாறு கூறப்பட்டபின் எப்படி (அவளுடன் நீர் வாழ முடியும்)?” என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூஇஹாப் தமீமியின் புதல்வியாவார்.4 அத்தியாயம் :

2053ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (தமது மரணத் தறுவாயில்) தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆ என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன்; எனவே, அவனை நீ கைப்பற்றிக்கொள்!” என்று உறுதிமொழி வாங்கினார். அதன்படி, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு, ‘‘இவன் என் சகோதரரின் மகன்; என்னிடத்தில் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்” எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது பிறந்த வன்” எனக் கூறினார். இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்” எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் புதல்வர் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸம்ஆவின் புதல்வர் அப்தே! இவன் உமக்கு உரியவú”’ எனக் கூறினார்கள். பின்னர், ‘‘(தாய்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது; விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! நீ இந்த இளைஞனிடமிருந்து திரையிட்டு உன்னை மறைத்துக்கொள்!” என்றார்கள். (‘அவர் ஸம்ஆவின் மகன்தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததால்தான் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு, அவர் அன்னை சவ்தா (ரலி) அவர்களை இறக்கும்வரை பார்க்கவில்லை.5 அத்தியாயம் :

2054அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடு வதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிராணியை அம்பின் கூர்முனை தாக்கிக் கொன்றால் அதை நீர் உண்ணலாம்; அம்பின் பக்கவாட்டுப் பகுதி தாக்கிக் கொன்றால் அதை நீர் உண்ணாதீர்!. ஏனெனில், அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாகும்” என்றார் கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் உண்ணலாமா?)” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உண்ணாதீர்! நீர் அல்லாஹ்வின் பெயர் கூறியது உமது நாயை அனுப்பியபோதுதான். மற்றொரு நாய்க்கு நீர் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என விடையளித்தார்கள்.6 அத்தியாயம் :

2055அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘‘இது தர்ம (ஸதகா)ப் பொரு ளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது படுக்கை யில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன் (அது தர்மப் பொருளாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் போட்டு விடுகிறேன்)” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :

2056அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் தொழும்போது வாயு பிரிந்தது போன்று உணர்கிறார்; இதனால் தொழுகை முறியுமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை முறியாது” என்றார்கள்.8 சப்தத்தைக் கேட்காமல், நாற்றத்தை உணராமல் அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டியதில்லை என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

2057ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரே! ஒரு கூட்டத் தார் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அதனை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அதை உண்ணுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :

2058ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டி ருந்தோம். அப்போது உணவுப் பொருட் களை ஏற்றிக்கொண்டு ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டக (வணிக)க் கூட்டம் வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர் களுடன் பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போதுதான், ‘‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் அதன்பால் சென்றுவிடுகிறார்கள்” (62:11) எனும் வசனம் அருளப்பெற்றது.9 அத்தியாயம் :

2059நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர், தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2061அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நாணயமாற்று வணிகம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வணிகம் செய்பவர்களாக இருந்தோம்: அவர்களிடம் இந்த நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டோம்; அதற்கு, உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை; தவணையாக இருந்தால் அது கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் (மொத்தம்) ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2062உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். லிஉமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள் போலும்லி அபூமூசா (ரலி) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். ‘‘அவர் திரும்பிச் சென்றுவிட்டார்” என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்துவரச் செய்தார்கள். (‘‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்” எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!” எனக் கூறினார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களில் சிறியவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்லமாட்டார்கள்” என்றனர். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) சந்தைகளில் நான் வணிகம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டது (போலும்)!” என்று கூறினார்கள்.10 அத்தியாயம் :

2063அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்: அவர் கடல் மார்க்கமாகப் பயணம் சென்று, தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டார். தொடர்ந்து ஹதீஸைக் கூறினார்கள்.11 அத்தியாயம் :

2064ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது, (வணிக)க் கூட்டம் ஒன்று வந்தது; உடனே பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒட்டக (வணிகக் கூட்டத்தை நோக்கி) கலைந்து சென்றுவிட்டனர். அப்போதுதான், ‘‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அங்கே சென்று விடுகிறார்கள்” (62:11) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

2065நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர் களுக்குத்) தர்மம் செய்தால், (அப்படி) தர்மம் செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்குக் கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்காக அவளுடைய கணவனுக்கும் நற்பலன் உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் (செலவிட உதவியதற்காக) அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும். அவர்களில் ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2066நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு பெண், தன் கணவனின் கட்டளை யின்றி அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் (சம்பாதித்த) அவனுக்கு நற்பலனில் பாதி உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2067அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது தமது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்பினால், அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.12 இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2068சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகத்தில் (சலம்) அடைமானம் பற்றிப் பேசினோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள்; அதற்காகத் தமது இரும்புக் கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி னார்கள் என நமக்கு அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

2069அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தீட்டப் படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப் பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து, அவரிடமிருந்து தம் குடும்பத்தாருக்காகத் தீட்டப்படாத கோதுமையை (கடனாக) வாங்கியிருந்தார்கள். ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ‘ஸாஉ’, மற்ற தானியங்களில் ஒரு ‘ஸாஉ’கூட இருந்ததில்லை. அந்த நேரத்தில் நபியவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்” என்று நபி (ஸல்) அவர்களே கூற நான் கேட்டிருந்தேன். அத்தியாயம் :

2070ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆனபோது ‘‘எனது தொழில் என் குடும்பத்தாரின் செலவுக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தார் அறிவர்; இப்போது நான் முஸ்லிம்களின் (தலைமைப்) பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்; இனி அபூபக்ரின் குடும்பத்தார் இந்த(ப் பொது) நிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக அபூபக்ர் உழைப்பார்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :

2071ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தோழர்கள் பலர் சுயதொழில் செய்(து உண்)பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே, ‘‘நீங்கள் குளிக்கக் கூடாதா?” என்று அவர்களிடம் கூறப்பட்டது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2072அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் கைத்தொழில் செய்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது. இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் கைத்தொழில் செய்து உண்பவர்களாகவே இருந்தார்கள். இதை மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2073அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி தாபூத் (அலை) அவர்கள் கைத் தொழில் செய்தே உண்பவர்களாக இருந் தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2074அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைத் தமது முதுகில் சும(ந்து விற்றுப் பிழை)ப்பதானது, பிறரிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். பிறர் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2075நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் கயிறுகளை எடுத்துக்கொண்டு... (என ஆரம்பித்து மேற்கண்டபடி இறுதிவரை). இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2076அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாங்கும்போதும் விற்கும்போதும் உரிமையை நிறைவேற்றக் கோரும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2077நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று அவரிடம், ‘‘நீர் (உமது வாழ் நாளில்) ஏதேனும் நன்மை செய்திருக் கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘‘(நான் மக்களுக்கு கடன் கொடுத்துவந்தேன்.) வசதியான கடனாளிக் கும் அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டு விடும்படியும் நான் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்” என்று கூறினார். உடனே ‘‘அவருடைய தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்” என்று (அல்லாஹ் வானவர்களிடம்) கூறினான். இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூமாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மென்மையாக நடப்பவனாகவும் இருந் தேன்” என்று அவர் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அப்துல் மலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும்வந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. நுஐம் பின் அபீஹின்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘‘வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்துவந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

2078நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம், ‘‘இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம் தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்” என்று கூறுவார். அல்லாஹ்வும் அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2079அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் வளம் (பரக்கத்) வழங்கப் படும். இருவரும் குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்படும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2080அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பலதரப்பட்ட பேரீச்சம் பழங்கள் கலந்து எங்களுக்கு வழங்கப்படும்; அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். (அவற்றில்) இரண்டு ‘ஸாஉ’களுக்கு ஒரு ‘ஸாஉ’ (உயர் ரகப் பேரீச்சம் பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்துவந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு ‘ஸாஉ’க்கு இரண்டு ‘ஸாஉ’கள் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள்.15 அத்தியாயம் :

2081அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் என்ற அன்சாரி, (பிராணியை) அறுத்துத் துண்டுபோடும் தம் ஊழியரிடம், ‘‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப்போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்” என்று கூறிவிட்டு, ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் மற்றொரு மனிதரும் சேர்ந்து வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பிவிட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பிவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள் ‘‘இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்” என்றார்கள். அத்தியாயம் :

2082நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால், அவர்களது வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந் தால் அவர்களின் வணிகத்தில் உள்ள வளம் அகற்றப்படும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2083நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதர், தாம் பொருளீட் டியது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா; அல்லது அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பது குறித்துப் பொருட்படுத்தமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2084ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275லி281) அருளப்பெற்றபோது, அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

2085நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) மனிதர்க(ளின் தோற்றத்தில் வந்த வானவர்க)ள் இரு வரைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டி ருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து, முன்பு நின்ற இடத்திற்கே அவரைத் திருப்பிவிடுகிறார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். ‘‘இவர் யார்?” என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன்: அதற்கு அவர்கள் ‘‘ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்” எனக் கூறினார்கள். இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2086அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்), குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். (பிறகு அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிடும்படி உத்தரவிட்டார்கள்.) (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் குருதி (உறிஞ்சி எடுப்பது)க்கான கூலியையும் தடை செய்தார்கள்; வட்டி வாங்குவதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள். மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.17 அத்தியாயம் :

2087அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; வளத்தை அழித்துவிடும்.18 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2088அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பிவைத்துக்கொண்டு, தாம் (கொள்முதல் செய்தபோது) கொடுக்காத விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்: முஸ்லிம்களில் ஒருவரை அ(ந்தப் பேரத்)தில் சிக்கவைப்பதற்காக (அவர் இவ்வாறு செய்தார்). அப்போதுதான், ‘‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங் களையும் அற்ப விலைக்கு விற்றுவிட்டவர் களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது” (3:77) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.19 அத்தியாயம் :

2089அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ர்) போரில் கிடைத்த செல்வங்களில் என் பங்காகக் கிடைத்த வயதான ஓர் ஒட்டகம் என்னிடம் இருந்தது; நபி (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து (குமுஸ்) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்குக் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமாவுடன் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க நான் விரும்பினேன். அப்போது யிபனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், அவர் என்னுடன் வந்து யிஇத்கிர்’ புல்லை நாங்கள் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று, அ(ந்தப் பணத்)தை என் மணவிருந்துக்கு (வலீமா) பயன்படுத்திக்கொள்ள விரும்பியிருந்தேன். அத்தியாயம் :

2090இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) ‘‘நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தி யிருக்கிறான். (இங்கு போர் செய்வது) எனக்குமுன் எவருக்கும் அனுமதிக்கப்பட வில்லை; எனக்குக்கூட பகலில் சிறிதுநேரம்தான் அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள புற்பூண்டுகள் பறிக்கப்படக் கூடாது! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது! இங்குள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக்கூடாது! இங்கே கீழே விழுந்துகிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது!” என்று கூறினார்கள். அப்போது அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், ‘‘எங்கள் வீடுகளின் கூரைகளுக்கும் பொற்கொல்லர் களுக்கும் பயன்படும் யிஇத்கிரை’த் தவிரவா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் யிஇத்கிரைத் தவிர!› என்றார் கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘வேட்டைப் பிராணி விரட்டப்படுவது என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் நீங்கள் தங்குவதுதான்” என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிஎங்கள் பொற்கொல்லர்களுக்கும் எங்கள் அடக்கத் தலங்களுக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.20 அத்தியாயம் :

2091கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லராக இருந்தேன். (இணைவைப்பாள ரான) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அப்போது அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்கு (திருப்பி)த்தரமாட்டேன்”’என்றார். நான், ‘‘அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படாத வரை நான் (முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அதற்கு அவர் ‘‘நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் அடைத்துவிடுகிறேன்” என்றார். அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துக்கொண்டு ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்’ என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிட்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) அளவற்ற அருளாள(னான இறைவ)னிடம் உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா? (19 :77, 78) எனும் இறைவசனங்கள் அருளப்பெற்றன. அத்தியாயம் :

2092அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் சுரைக்காயும் உப்புக் கண்டமும் உள்ள குழம்பையும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன். அத்தியாயம் :

2093அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) சால்வை (புர்தா) ஒன்றைக் கொண்டு வந்தார்” எனக் கூறிவிட்டு, ‘‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம்! அது ஓரத்தில் குஞ்சம் கட்டப்பட்ட சால்வைதான்” என்று கூறப்பட்டது. (தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அப்பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நானே என் கையால் நெய்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றுக்கொண்டார்கள். (அவர்கள் உள்ளே சென்றுவிட்டு) எங்களிடம் திரும்பி வந்தபோது அதைக் கீழாடையாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (தருகிறேன்)” என்று சொல்லிவிட்டு, சபையில் (சிறிது நேரம்) அமர்ந்திருந்தார் கள். பிறகு (உள்ளே சென்றுவிட்டுத்) திரும்பி வந்து, அதைச் சுருட்டி (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், ‘‘நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங் கையாக திருப்பியனுப்பமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே!” எனக் கூறினர். அதற்கு அம்மனிதர், ‘‘நான் இறக்கும் நாளில் அது எனக்குச் சவக்கோடியாக (கஃபன்) ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்” என்றார். அது அவ்வாறே, அவரது கஃபனாக ஆனது.21 அத்தியாயம் :

2094அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, (நபி (ஸல்) அவர்களின்) சொற்பொழிவு மேடை (மிம்பர்) பற்றிக் கேட்டனர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம் லிஅப்பெண் மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்லி ஆளனுப்பி, ‘‘தச்சு வேலை செய்யும் உன் அடிமையிடம், நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் அவ்வாறே அடிமைக்கு உத்தரவிட்டார். அவர் (மதீனா அருகிலுள்ள) ‘அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தால் அதைச் செய்து கொண்டுவந்தார். அப்பெண்மணி அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தனுப்பினார். அதை உரிய இடத்தில் வைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவ்வாறே அது வைக்கப்பட்டது. அதன்மேல் அமர்ந் தார்கள்.22 அத்தியாயம் :

2095ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரட்டுமா?” என்று கேட்டார். யிஉன் விருப்பம்’ என நபி (ஸல்) அவர்கள் கூற, அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) தயார் செய்தார். வெள்ளிக்கிழமை வந்ததும், தயாரிக்கப்பட்ட அந்த மேடையில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன்னர் நின்று உரை நிகழ்த்திய பேரீச்ச மரக்கட்டை இரண்டாகப் பிளந்து விடுமளவிற்குச் சப்தமிட்டது. நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி அதைத் தொட்டுத் தம்முடன் அணைத்துக்கொண்டார்கள். அமைதிப்படுத்தப்படும் குழந்தை சிணுங்குவதைப் போன்று அது சிணுங்கியது; இறுதியில் அமைதியானது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘தான் செவியுற்றுவந்த போதனை’னால்தான் (இனி அது தன்மீது நிகழ்த்தப்படாதே என்றெண்ணித்தான்) அது அழுதது” என்றார்கள். அத்தியாயம் :

2096ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் கடனாக உணவுப் பொருளை வாங்கினார்கள்; தமது கவசத்தை அவரிடம் அடைமானமாக வைத்தார்கள்.23 அத்தியாயம் :

2097ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்தி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘ஜாபிரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்றேன். ‘‘என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். ‘‘என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி முனைப் பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு ‘‘(ஒட்டகத்தில்) ஏறு!” என்றார்கள். நான் ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் மணமுடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். ‘‘கன்னி கழிந்த பெண்ணைத்தான்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கொஞ்சிக் குலவி மகிழ்ந் திருக்கலாமே!” என்று கூறினார்கள். நான், ‘‘எனக்குச் சகோதரிகள் உள்ளனர்; அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்போது ஊருக்கு செல்லப்போகிறாய்; ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீராக! புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீராக!” என்று கூறிவிட்டு பின்னர், ‘‘உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘சரி” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் யிஊக்கியா’ விலை பேசி அதை என்னிட மிருந்து வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வரும்வரை என் ஒட்டகத்திலேயே நான் பயணித்தேன்.) பிறகு எனக்கு முன்பே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். ‘‘இப்போதுதான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழு தேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடைபோடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!” என்று (அங்கிருந்தவரிடம்) கூறினார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என்னிடம் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

2098இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உ(க்)காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அந்த இடங்களில் வணிகம் செய்வது பாவம் என்று மக்கள் கருதினர். அப்போதுதான் அல்லாஹ், ‘‘உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமன்று” (2:198) எனும் வசனத்தை அருளினான். அதாவது ஹஜ் காலங்களில் (குற்ற மன்று). இவ்வாறே (ஹஜ் காலங்களில் லி ஃபீ மவாசிமில் ஹஜ் என்பதையும் சேர்த்தே) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை ஓதினார்கள் என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.24 அத்தியாயம் :

2099அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸின் கூட்டாளி ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினார் கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று ‘‘அந்த ஒட்டகத்தை நாம் விற்று விட்டோம்” என்றார். நவ்வாஸ் ‘‘யாரிடம் விற்றீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘யிஇன்ன இன்ன தன்மை உடைய பெரிய வரிடம் விற்றேன்” என்றார். அதற்கு நவ்வாஸ் ‘‘உமக்குக் கேடுதான்! அல்லாஹ் வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தான்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். ‘‘என் கூட்டாளி, அடங்காத் தாகமுள்ள (நோயாளி) ஒட்டகத்தை உங்களிடம் விற்றுவிட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லை” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீ ராக!” என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அதை விட்டுவிடுவீராக! யிதொற்று நோய் கிடையாது!› என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் முழுமனதுடன் ஏற்கிறேன். (இந்த நோயுள்ள ஒட்டகத்தால் என் ஏனைய ஒட்டகங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது)” என்றார்கள். அத்தியாயம் :

2100அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுனைன் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (போரில் எதிரியிடமிருந்து நான் கைப்பற்றிய) கவசம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். நான் அந்தக் கவசத்தை விற்று, அதைக் கொண்டு பனூ சலிமா குலத்தார் வசிக்கும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை விலைக்கு வாங்கி னேன். அதுதான், நான் இஸ்லாத்திற்கு வந்தபின் வாங்கிய முதல் சொத்தாகும்.25 அத்தியாயம் :

2101அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம், கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையும் ஆகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம். கொல்லனின் உலையானது, உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும்; அல்லது அவனிடமிருந்து துர்வாடையையாவது நீர் அடைந்தே தீருவாய். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2102அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையான) அபூதைபா என்பவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார்; அவருக்கு (கூலியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்கு மாறு அவருடைய உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :

2103இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கு (கூலி) கொடுத்தார்கள். அது தடை செய்யப் பட்டதாக இருந்திருந்தால், அவருக்கு (கூலி) கொடுத்திருக்கமாட்டார்கள். அத்தியாயம் :

2104இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு, கோடு போட்ட ஒரு ஜோடி பட்டு அங்கியை அனுப்பி வைத்தார்கள். அதை உமர் (ரலி) அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீர் அணிவதற்காக நான் உமக்கு அனுப்பிவைக்கவில்லை. (மறுமையின்) நற்பேறற்றவர்கள்தான் இதை அணிவார்கள். இதைக் கொண்டு நீர் பயன் அடைவதற்காகவே லிஅதாவது விற்பதற்காகவேலி உமக்குக் கொடுத்த னுப்பினேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2105ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். ‘‘நீங்கள் இதன்மேல் அமர்வதற்காகவும் தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்படும். உருவப்படங்கள் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” எனக் கூறினார்கள்.26 அத்தியாயம் :

2106அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவில் பள்ளிவாசல் கட்ட எண்ணியபோது), ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதில் பாழடைந்த கட்டடங் களும் பேரீச்ச மரங்களும் இருந்தன. அத்தியாயம் :

2107நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை தமது வியாபாரத்தில் (ஒரு முடிவு எடுக்க) உரிமை பெற்றிருக்கிறார்கள்; (முன்நிபந் தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபார மாக இருந்தால் தவிர! (அப்போது முன் நிபந்தனையின்படி நடந்துகொள்ளலாம்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு பொருளை விலைக்கு வாங்கி(ட எண்ணி)னால், (அதை உறுதி செய்யும் வகையில்) விற்றவரைப் பிரி(ந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரு)வார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள்.28 அத்தியாயம் :

2108நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை பெறுகிறார்கள். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2109நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை, (வியாபாரத்தை முறிக்க) உரிமை பெறுகிறார்கள்; ஒருவர் மற்றவரிடம் ‘(வணிகத்தைத் தொடரவோ முறிக்கவோ) உமக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தால் தவிர’ அல்லது ‘அது (முன் நிபந்தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர!›. அத்தியாயம் :

2110நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால், அவர் களின் வணிகத்தில் அவர்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வணிகத்தின் வளம் அகற்றப்படும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2111அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்நிபந்தனை) உரிமை வழங்கப் பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியா பாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை ஒவ்வொருவரும் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2112அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வணிகம் செய்தால், அவ்விருவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை (பேரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக்கொள்ளும் உரிமையை வழங்கியும் அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டால் வணிகம் ஏற்பட்டுவிடும்; இருவரும் ஒப்பந்தத்தை முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வணிகம் ஏற்பட்டுவிடும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2113நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்கக்கூடியவரும் வாங்கக்கூடியவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை அவர்களுக்கிடையே வணிகம் ஏற்படுவதில்லை; (முன்நிபந்தனை) உரிமை வழங்கப்பட்ட வியாபாரமாக இருந்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2114நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெறுகின்றனர். விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவர்கள் பொய் சொல்லி (குறைகளை) மறைத்தால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம். ஆனாலும், வணிகத்தின் வளம் (பரக்கத்) அழிக்கப் பட்டுவிடும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘நான் பதிவு செய்த ஏட்டில், இவ்வாறு மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2115அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நான் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தாருக்கு முன்னால் சென்றது. உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள்; மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுவீராக!” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்கு உரியது” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு இதை விலைக்குத் தருவீராக!” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்னி டம்), ‘‘அப்துல்லாஹ் பின் உமரே! இது உமக்குரியது; நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக்கொள்ளும்!” என்றார்கள். அத்தியாயம் :

2116அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் யிவாதில் குரா’ எனும் இடத்தில் இருந்த எனது சொத்தை கைபரில் அவர்களுக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வணிகம் பேசி முடித்ததும் உடனடியாக அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பி விட்டேன். அவர்கள் அந்த வியாபாரத்தை முறித்துவிடுவார்களோ என்ற அச்சமே அதற்குக் காரணமாகும். ஏனெனில், ‘‘(பேரம் நடந்த இடத்தை விட்டுப்) பிரியாத வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக்கொள்ளும் உரிமை உள்ளது” என்பது நபிவழியாக உள்ளது. நான் வாங்குவதும் அவர்கள் விற்பதும் முடிவானதும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாகக் கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள, ஸமூத் குலத்தார் வசித்த பகுதிக்கு அவர்களை நான் தள்ளிவிட்டேன்; அவர்கள் (அங்கிருந்து) மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்கள்.31 அத்தியாயம் :

2117அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், தாம் வணிகத்தின்போது ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் வணிகம் செய்யும்போது ஏமாற்றுதல் கூடாது என்று (முன்பே) கூறிவிடுவீராக!” என்றார்கள்.32 அத்தியாயம் :

2118ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; யிபைதாஉ’ எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (உயிருடன்) பூமிக்குள் புதையுண்டுபோவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை எவ்வாறு புதை யுண்டுபோவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதி களும் இருக்குமே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் ஆரம்பமானவர் முதல், கடைசி நபர்வரை (எல்லாரும்) புதையுண்டுபோகத்தான் செய்வார்கள்; எனினும், (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்றார்கள். அத்தியாயம் :

2119அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது, அவர் தமது கடைத்தெருவிலோ வீட்டிலோ (தனியாகத்) தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் அங்கத் தூய்மை செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்லவைக்கவில்லை. இவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரைவிட்டு நீக்கப்படுகிறது. மேலும், உங்களில் ஒருவர், தாம் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும்வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றனர். அங்கே, அவருக்கு அங்கத் தூய்மை கலையாமல் இருக்கும்வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யா மலிருக்கும்வரை, ‘‘இறைவா! இவருக்குக் கருணை செய்வாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக் கிறார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக் காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2120அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அபுல்காசிமே! (காஸிமின் தந்தையே!)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக்காட்டி) ‘‘நான் இவரைத்தான் அழைத்தேன். (தங்களை அழைக்கவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது (முஹம்மத் எனும்) பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்!” என்றார்கள். அத்தியாயம் :

2121அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ‘அல்பகீஉ’ பொது மையவாடியில் ‘அபுல்காசிமே!› என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அவர், ‘‘உங்களை எண்ணி நான் அழைக்கவில்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள்; எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்றார்கள். அத்தியாயம் :

2122அபூஹுரைரா அத்தவ்சி (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் வேளையில் புறப்பட்டார்கள். (நானும் சென்றேன்.) அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேச வில்லை. யிபனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந் தார்கள். ‘‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?” என்று (பேரர் ஹசன் (ரலி) அவர்கள் குறித்துக்) கேட்டார் கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக்கொண்டிருக்கிறார்; அல்லது மகனை நீராட்டிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன் (ரலி) அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். ‘‘இறைவா! இவரை நீ நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (இதை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ஒரு ரக்அத் யிவித்ர்’ தொழுததை நான் பார்த்தேன். (இதிலிருந்து அவரை இவர் சந்தித்துள்ளார் என அறியலாம்.) அத்தியாயம் :

2125அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, ‘‘தவ்ராத் வேதத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டி ருக்கும் வர்ணனை பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள், சரி என்று சொல்லிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்பட்டுள்ள அவர்களின் சில பண்புகளாலேயே யிதவ்ராத்’திலும் அவர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளார்கள்: நபியே! உம்மை ஒரு சாட்சியாகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடிமையும் என் தூதரும் ஆவீர். ‘அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர்’ (அல்முத்தவக்கில்) என உமக்கு நான் பெயரிட் டுள்ளேன். (என் தூதரான) அவர் கடுகடுப்பான வரோ கல்நெஞ்சம் படைத்தவரோ சந்தைகளில் கூச்சலிடுபவரோ அல்லர். தீமையை தீமையைக் கொண்டு அகற்ற (முனைய)மாட்டார். மாறாக, மன்னித்து, விட்டுவிடுவார். வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாத வரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும் செவிட்டுக் காதுகளும் மூடப்பட்ட உள்ளங் களும் திறக்கப்படும்.37 இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடமிருந்தும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (யிமூடப்பட்ட’ உள்ளங்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஃகுல்ஃப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிஉறையிலுள்ள பொருட்கள்’ என்பது பொருள். உறை’ லுள்ள வாள், உறையிலுள்ள வில், விருத்த சேதனம் செய்யப்படாத மனிதன் ஆகிய பொருள்களைக் குறிக்க இச்சொல் (அஃக்லஃப்) ஆளப்படுகிறது. அத்தியாயம் :

2126அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு (முழுமையாக) வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2127ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்கள் தம்மீது கடன் உள்ள நிலையில் இறந்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள், அவரது கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் உதவியை நான் நாடினேன். அவ்வாறே, நபி (ஸல்) அவர்களும் (கடனைத் தள்ளுபடி செய்யும்படி) அவர்களிடம் கோரினார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் சென்று உமது பேரீச்சம் பழத்தில் ‘அஜ்வா’ எனும் (உயர்) ரகத்தைத் தனியாகவும் யிஇப்னு ஸைத்’ எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் ஆளனுப்புவீராக!” என்றார்கள். அவ்வாறே நான் செய்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப் பினேன். அவர்கள் வந்து அதன் மேற் புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் ‘‘(கடன் கொடுத்த) இக்கூட்டத்தாருக்கு அளந்து கொடுப்பீராக!” என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். எனது பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாததைப் போன்று அப்படியே எஞ்சியிருந்தது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஃபிராஸ் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவர்களுக்கு (முழுமை யாக) கடனை அடைக்கும்வரை அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘கடன் கொடுத்தவருக்காக (பேரீச்சம் பாளையைத்) தனியாகப் பிரித்து, முழுமையாகக் கொடுத்துவிடு” என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

2128நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் உணவு(ப் பொருட்)களை அளந்துகொள்ளுங்கள்; உங்களுக்கு வளம் (பரக்கத்) வழங்கப்படும்.39 இதை மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2129நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வைப் புனித நகரமாக அறிவித்து, அதற் காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக அதன் (அளவை களான) ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் (வளம் ஏற்பட) பிரார்த்தித்தேன். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2130அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! அவர்களின் லிஅதாவது மதீனாவாசிகளின்லி முகத்தலளவையில் நீ வளம் (பரக்கத்) வழங்குவாயாக! (குறிப்பாக) அவர்களது ஸாஉ, யிமுத்’ ஆகியவற்றில் நீ வளத்தை வழங்குவாயாக! இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2131இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன். அத்தியாயம் :

2132தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட் டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உணவுப் பொருள் (அதை வாங்கியவரின் கைக்குப்) போய்ச்சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.42 அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் யிவந்து சேராதது’ என்பதைக் குறிக்க யிமுர்ஜஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் இதன் பன்மையான) யிமுர்ஜஊ” (முர்ஜவ்ன) எனும் சொல் (9:106) ஆளப்பட்டுள்ளது. இதற்கு, யிதாமதத்தில் (காத்திருப்பில்) வைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :

2133நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2134முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள், ‘‘(என்னிடமுள்ள தங்கத்திற்குப் பதிலாக) யாரிடமாவது வெள்ளிக் காசுகள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அப்போது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘என்னிடம் இருக்கிறது; ஆனால், (நாணய மதிப்பைக் கணிக்க) யிஃகாபா’ எனும் இடத்திலிருந்து எம் காசாளர் வந்தபிறகே தருவேன்” என்றார்கள். அப்போது (அங்கிருந்த) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்: உடனுக்குடன் அல்லாமல் (தவணையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல், தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல், வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்.43 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்டு ம”மிட்டுள் ளோம்; அதில் கூடுதல் தகவல் இல்லை (எனவே, ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் சரியானதுதான்). அத்தியாயம் :

2135இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தடுத்தது, உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்குமுன் அதை (மற்றவருக்கு) விற்பதைத்தான். ஆனால், அதைப் போன்றதுதான் மற்ற எல்லாப் பொருட்களும் என்றே நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :

2136நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது முழுமையாக அவரது கைக்கு வந்து சேர்வதற்குமுன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அதை அவர் கைப்பற்றாத வரை’ என்று இடம்பெற்றுள்ளது.44 அத்தியாயம் :

2137இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள், குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கிக்கொண்டி ருந்தபோது, அவற்றைத் தம் இருப்பிடங் களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :

2138ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாட்கள் மிகவும் அரிதாகும். மதீனாவிற்கு (புலம்பெயர்ந்து) செல்ல நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கிடைத்தபோது, (ஒரு நாள்) மதியம் (திடீரென) எங்களிடம் வந்து எங்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘புதிதாக ஏற்பட்ட ஏதோ ஒன்றுக்காகத்தான் இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்ததும், ‘‘உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என் இரு புதல்வியர் மட்டுமே உள்ளனர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக் கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன; அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறி னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் எடுத்துக்கொண்டுவிட்டேன்” என்றார்கள்.46 அத்தியாயம் :

2139அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வணிகம் செய்துகொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யக் கூடாது! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2140அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (விற்பனை சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! ஒருவர் வணிகம் செய்துகொண்டிருக்கும் போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்! தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்தில் உள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி)விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தன் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

2141ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தமக்குச் சொந்தமான அடிமை ஒருவர் விடுதலையாகிக்கொள்ளட்டும் என்று (பின் தேதியிட்டு விடுதலை) அறிவித்திருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, ‘‘இவரை என்னிட மிருந்து (அதிக விலைக்கு) வாங்கிக் கொள்பவர் யார்?” என்று கேட்டார்கள். அவரை நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இன்ன விலைக்கு (எண்ணூறு வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கிக்கொண் டார்கள்; நபி (ஸல்) அவர்கள், அம்மனிதரி டம் அவ்விலையைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :

2142இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்க மின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2143அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹபலுல் ஹபலா’வை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இந்த வியாபாரம் செய்துவந்தார்கள். (அதாவது) ஒருவர் ஒட்டகத்தை விலைக்கு வாங்குவார்; அந்த ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி தனது குட்டியை ஈனும்வரை (தவணை சொல்லி, அப்போதுதான் தாம் வாங்கிய ஒட்டகத்திற்கான விலையைத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொள்வார்). அத்தியாயம் :

2144அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எறிமுறை (முனாபதா) வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுனாபதா’ என்பது, ஒருவர் தமது (விற்பனைத்) துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்குமுன் வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டாலே அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும். மேலும், தொடுமுறை (முலாமசா) வியாபாரத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். யிமுலாமசா’ என்பது, துணியை (விரித்துப்) பார்க்காமலேயே அதைத் தொட்டவுடன் (வணிகம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வ தாகும். அத்தியாயம் :

2145அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களால்) ஆடை அணியும் இரு முறை களுக்குத் தடை விதிக்கப்பட்டது: ஒரே துணியை ஒருவர் உடலில் சுற்றிக்கொண்டு, அத(ன் ஒரு மூலைத)னை (ஒரு) தோளில் போட்டு(க்கொண்டு மற்றொரு தோளை திறந்த நிலையில் விட்டு)விடுவது. (மற்றொன்று: ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு தெரியுமாறு குத்துக்காலிட்டு அமர்வது). மேலும், தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய இரு வணிகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அத்தியாயம் :

2146அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2147அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் தொடுமுறை (முலாமசா), எறிமுறை (முனாபதா) ஆகிய இரு வணிக முறைகளையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2148நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற் றின் பாலைக் கறக்காமல் விட்டு வைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணி களை வாங்கியவர், விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக்கொள்ள லாம்; விரும்பாவிட்டால் (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் சிறந்த ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘‘(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளி லிருந்து) மூன்று நாட்கள் வரையில்தான்!” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வேறுசில அறிவிப்புகளில், யிஒரு ஸாஉ பேரீச்சம்பழம்’ என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே காணப்படுகிறது. மூன்று நாட்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. ஆக, யிபேரீச்சம் பழத்தின் ஒரு ஸாஉ’ என்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகிறது. அத்தியாயம் :

2149இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால், அத்துடன் ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக் கட்டும்! மேலும், (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

2150அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத் தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங் காதீர்கள்!53 ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி (விலையை ஏற்றிவிட வேண்டும் என்பதற்காகவே) விலை கேட்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியைக் கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால், அந்த ஆட்டை (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்துவிடலாம். இவ்விரண்டில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2151அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் விலைக்கு வாங்கினால், அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாஉ பேரீச்சம்பழம் கொடுக்க வேண்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2152நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால் அவளுக்கு, (உரிமையாளன் ஐம்பது) சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் அவளுக்கு (ஐம்பது சாட்டையடி) கொடுக்கட்டும்! (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம்! மூன்றாம் முறையும் விபசாரம் செய்தால், அவளை (அவளுடைய உரிமையாளன்) ஒரு முடிக்கற்றைக்காவது விற்று விடட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2154அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது: ‘‘மணமுடிக்காத ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள்; (அதற்குப்) பிறகும் விபசாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள்; மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு கயிற்றுக்காவது விற்று விடுங்கள்” என்றார்கள். ‘‘மூன்றாவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா; அல்லது நான்காவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

2155ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது தொடர்பான) விஷயத்தை அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்தபின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத்தான்” என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை செல்லாதது ஆகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் ஆகும்” எனக் கூறி னார்கள். அத்தியாயம் :

2156அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், (அடிமை யாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழு கைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பரீராவின் உரிமையாளர்கள், யிபரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினால் தவிர, அவரை விற்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமையின் (மரணத்திற்குப்பின் அவருக்கு) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத்தான் உரியது” எனக் கூறினார்கள்.55 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா? என்று நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், யிஎனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

2157ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதி கூறல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், (நபியவர்களின் கட்டளைகளைச் செவியேற்றுக் கட்டுப் படுதல், எல்லா முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுதல் ஆகிய விஷயங்களை ஏற்றுச் செயல்படுவதாக அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அத்தியாயம் :

2158அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்தி லிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக் காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இடைத்தரகராக இருக்கக் கூடாது (என்பது தான் அதன் பொருள்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

2159அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இவ்வாறே (இடைத்தரகராக இருப்பது கூடாதென) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2160அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வணிகம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்ய வேண்டாம். (வாங்கும் நோக்க மின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2161அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாயம் :

2162அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வெளியிலிருந்து வரும்) வணிகர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சரக்குகளை) வாங்குவதையும் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அத்தியாயம் :

2163தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘இவர் அவருக்கு இடைத்தரகராக இருக்கக் கூடாது” என்றார்கள். அத்தியாயம் :

2164அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை விலைக்கு வாங்கியவர் (அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்), அத்துடன் ஒரு ஸாஉ (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2165அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யலாகாது; மேலும், விற்பனைப் பொருட்கள் சந்தைக்கு கொண்டுவந்து இறக்கப்படுவதற்குமுன் (இடையிலேயே) வாங்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2166அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெளியூரிலிருந்து சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை (ஊருக்குள்) எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கிவந்தோம். (அவ்வாறு நாங்கள் வாங்கும்) உணவுப் பொருள் உணவுச் சந்தைக்குக் கொண்டுசெல்லப் படுவதற்குமுன் அதை நாங்கள் விற்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: வணிகர்களை எதிர்கொண்டது சந்தை (கடைவீதி) துவங்கும் இடத்தில்தான். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அத்தியாயம் :

2167அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்கள் உணவுப் பொருட் களைக் கடைவீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்றுவந்தனர்; ஆகவே, கடைத்தெருவுக்குள் கொண்டு சொல்லாமல் வாங்கிய இடத்திலேயே அவர்கள் விற்கக் கூடாதென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2168ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா (ரலி) என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமை யாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் யிஊ(க்)கியா’ வீதம் (ஒன்பது ஆண்டுகளில்) ஒன்பது யிஊ(க்)கியா’க்கள் செலுத்தி (விடுதலை ஆகி)விடுவதென எழுதிக்கொடுத்துள் ளேன்; எனக்கு நீங்கள் உதவுங்கள்” என்றார். அதற்கு நான், ‘‘உன் வாரிசுரிமை (அல்வலாஉ) எனக்கே இருக்க வேண்டும் என்பதை உன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்கிறேன்” எனக் கூறினேன். உடனே, பரீரா தம் உரிமையாளர்களிடம் சென்றார். அவர்களி டம் அவர் இதைக் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது பரீரா, தம் உரிமை யாளர்களிடமிருந்து திரும்பி வந்து, ‘‘விஷயத்தை உரிமையாளர்களிடம் கூறினேன்; அவர்கள் யிவாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும்’ எனக் கூறி, மறுத்து விட்டனர்” என்று கூறினார். இதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பரீராவை நீ வாங்கிக்கொள்! யிவாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று அறிவித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்). ஏனெனில், (அடிமை இறந்தபின் அவனுக்கு) வாரிசாகும் உரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியது” எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்: இறை வாழ்த்துக்குப்பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த நிபந்தனையும் செல்லாதது ஆகும். அவை நூறு நிபந்தனைகளாயினும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத் தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது. நிச்சயமாக, அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்த வருக்கே உரியது. அத்தியாயம் :

2169அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அடிமைப் பெண்ணின் உரிமையாளர்கள், யிஇவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் அடிப் படையில் உமக்கு விற்கிறோம் எனக் கூறினார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘‘அவர்களின் நிபந்தனை உனக்குத் தடையாக இராது; ஏனெனில், அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை (அவர்களை) விடுதலை செய்தவருக்கே உரியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

2170நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக் குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வது வட்டியாகும். உடனுக்கு டன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம்பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2171அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, (பேரீச்ச மரத்திலுள்ள உலராத) கனிகளை, (கொய்யப்பட்டு) அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்ட மாற்று முறையில்) விற்பதும் (கொடியி லுள்ள) திராட்சைப் பழத்தை, (பறித்து) அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்குப் பதிலாக (பண்டமாற்று முறையில்) விற்பதும் ஆகும்.61 அத்தியாயம் :

2173இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும்போது, ‘அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது’ என்று கூறி விற்பதாகும். அத்தியாயம் :

2174மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நூறு பொற்காசுகளை (வெள்ளிக் காசுகளாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். நாங்கள் விலை குறித்துப் பேசினோம். இறுதியில் எனக்கு நாணயமாற்றுச் செய்ய அவர்கள் முன்வந்தார்கள். (என்னிடமிருந்து) பொற்காசுகளைப் பெற்று தமது கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு ‘அல்ஃகாபா’ எனும் இடத்திலிருந்து என் காசாளர் வரும்வரை (நீர் பொறுத்திருக்க வேண்டும்) என்றார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (என்னிடம்), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவரிடமிருந்து (பொற்காசுகளுக்குப் பதிலாக வெள்ளிக் காசுகளைப்) பெறாமல் நீர் (இந்த இடத்தை விட்டுப்) பிரியக் கூடாது; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஉடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக்கொள்வது வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் பேரீச்சம்பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும் என்று கூறியுள்ளார்கள்” என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :

2175அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தை யும் விரும்பியவாறு விற்றுக்கொள் ளுங்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2176சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இதற்குமுன் 2174ஆவது ஹதீஸில் உமர் (ரலி) அவர்கள் அறிவித்த) அந்த ஹதீஸைப் போன்று ஒரு ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் (ஒரு தடவை) அபூசயீத் (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிவித்த அந்த ஹதீஸ் என்ன? (திரும்பக் கூறுங்கள்)” என்று (உறுதிபடுத்திக் கொள்வதற்காகக்) கேட்டார்கள். அப்போது யிநாணயமாற்று’ தொடர்பாக அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘தங்கத்தை தங்கத்திற்குச் சரிக்குச் சமமாகவே (விற்க வேண்டும்); வெள்ளியை வெள்ளிக்குச் சரிக்குச் சமமாகவே (விற்க வேண்டும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :

2177அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (எடையில்) சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ) விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ, குறைத்தோ)விடாதீர்கள்! அவற்றில் ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்! இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2179அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ‘‘தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் (சரிக்குச் சமமாக மட்டுமே) விற்கலாம்!” என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்களிடம் நான், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுவதில் லையே!” எனக் கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் இ(வ்வாறு கூறிவருவ)தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர் களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவ்வா றெல்லாம் நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நன்கறிந்தவர்; என்றாலும், கடனில் (தவணையில்) தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார் என்று விடையளித்தார்கள்.63 அத்தியாயம் :

2181அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். அப்போது அவ்விருவரில் ஒவ்வொருவரும் (மற்றறவர் குறித்து) ‘‘இவர் என்னைவிடச் சிறந்தவர்” என்று சொல்லிக்கொண்டனர். பிறகு இருவருமே, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக் குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார் கள்” என்று பதிலளித்தனர்.65 அத்தியாயம் :

2182அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகத் தவிர (வேறு விதமாக) விற்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். (ஆனால்,) வெள்ளியைத் தங்கத்திற்கு நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் தங்கத்தை வெள்ளிக்கு நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.66 அத்தியாயம் :

2184அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப் படும் நிலையை அடையாத வரை அவற்றை நீங்கள் விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனி களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்க வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2185அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது (மரத்திலுள்ள) உலராத பேரீச்சங்கனிகளை (பறிக்கப்பட்ட) உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதும் ஆகும். அத்தியாயம் :

2186அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா, முஹாகலா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது பேரீச்ச மரங்களின் உச்சியிலுள்ள பேரீச்சம்பழங்களை (கொய்யப்பட்ட) உலர்ந்த பேரீச்சம்பழங் களுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதாகும். அத்தியாயம் :

2187இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிமுஹாகலா, முஸாபனா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2188ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை, இரவல் மரத்தை (அரிய்யா) பெற்றவருக்கு மட்டும் அனுமதித்தார்கள். அத்தியாயம் :

2189ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரத்திலுள்ள) உலராத கனிகள் நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘அவற்றில் எதையும் பொற்காசு, வெள்ளிக் காசு ஆகியவற்றுக்காகத் தவிர விற்கக் கூடாது; இரவல் மரங்களை (அராயா) தவிர” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2190அப்துல்லாஹ் பின் அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(இப்னு அபீஅஹ்மத் அவர் களின் முன்னால் அடிமையான) அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்கள், பின்வரும் நபிமொழியை அறிவித்தார்களா?” என்று உபைதுல்லாஹ் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்கள் கேட்டார் கள். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் யிஆம்’ என்று பதிலளித்தார்கள். (அந்த ஹதீஸாவது:) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘அராயா’ வணிகத்தில் (மரத்திலுள்ள உலராத பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பதிலாக) யிஐந்து யிவஸ்க்’கள்’, அல்லது யிஐந்து யிவஸ்க்’களுக்குக் குறைவாக’ (விற்பனை செய்துகொள்ள) அனுமதி அளித்தார்கள்.69 அத்தியாயம் :

2191சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; இரவல் மரங்களில் (‘அராயா’வில் மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். (ஏழைகளுக்கு இரவலாக வழங்கப்பட்ட மரங்களில் உள்ள) அக் கனிகள் குத்துமதிப்பாகக் கணக்கிடப்பட்டு (தோட்டக்காரர்களுக்கு) விற்கப்படும். (அவற்றை வாங்கும்) தோட்டக்காரர்கள் செங்காய்களாக உண்பார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை கூறினார்கள்: ஆனால், இரவல் மரங்களில் (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார் கள். (ஏழைகளின் இரவல் மரங்களில் உள்ள) அக்கனிகளைத் தோட்டக்காரர்கள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு (உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக) விற்றுவிட்டு, அந்தச் செங்காய்களை உண்பார்கள். ‘‘இந்த அறிவிப்பும் முந்தைய அறிவிப்பும் (பொருளில்) ஒன்றுதான்” என்று அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சிறுவனாக இருந்தபோது, யஹ்யா பின் சயீத் அல்அன்சாரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘இரவல் (அராயா) மரங்களுக்கு (குத்துமதிப்பு மற்றும் செங்காய்களாக உண்பது தொடர்பான எந்த நிபந்தனையுமின்றி) நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதாக மக்காவாசிகள் கூறுகிறார்களே!” என்று கேட்டேன். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், ‘‘மக்காவாசிகளுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘மக்காவாசிகள் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்டு யஹ்யா மௌனமானார். நான் ஜாபிர் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம், அவர் மதீனாவாசி ஆவார் என்பதேயாகும்.70 ‘‘பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்பதற்கான தடை இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லையா?” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘‘(அது உண்மைதான்; என்றாலும் இந்த அறிவிப்பில்) இடம்பெறவில்லை” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

2192ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவல் மரங்களில் (அராயா) உள்ள பழங்களைக் குத்துமதிப்பாகக் கணித்து (உலர்ந்த கனிகளுக்குப் பதில்) முகத்தலள வையில் விற்பதற்கு அனுமதி அளித்தார் கள். இதன் அறிவிப்பாளர்களில ஒருவரான மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அராயா என்பது குறிப்பிட்ட சில பேரீச்ச மரங்களாகும். அங்கு வந்து (உலர்ந்த பழங்களைக் கொடுத்துவிட்டு அதன்) கனிகளை யாரும் வாங்கிக் கொள்ளலாம். அத்தியாயம் :

2193ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கள் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மக்கள் பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம்வந்ததும் வாங்கியவர், இது அழுகி விட்டது; இதற்கு நோய் ஏற்பட்டிருக்கிறது; இது பிஞ்சில் பழுத்திருக்கிறது; இப்படி பல குறைகளைக் கூறிச் சச்சரவு செய்வர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் அதிமாக வந்தபோது, ‘‘(இந்த வணிக முறையை) நீங்கள் கைவிடமாட்டீர்கள் என்றால், மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (அறவே) விற்காதீர்கள்” என்று ஆலோசனைபோல் கூறினார்கள். அவர்களின் சர்ச்சை அதிகமாகிவிட்டது என்பதை இதன் மூலம் நபியவர்கள் உணர்த்தினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், கிருத்திகா விண்மீன் (ஸுரய்யா) (தோன்றக்கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வராத வரை தமது தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்கமாட்டார்கள். அப்பருவத்தில் செங்காய் எது. பழுத் தது எது என்று அடையாளம் தெரியும் என அவர்களின் புதல்வர் காரிஜா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இதை அலீ பின் பஹ்ர் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் மற்றொரு தொடரில் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2194அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். விற்ப வர், வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள். அத்தியாயம் :

2195அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாதவரை லிஅதாவது (உண்பதற்கு ஏற்றவாறு) சிவக்காத வரைலி அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

2196சயீத் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘மரத்திலுள்ள கனிகள் (நன்கு) கனியாதவரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது யிகனிதல்’ (இஷ்காஹ்) என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும்” என விடையளித்தார்கள். அத்தியாயம் :

2197ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்குமுன் மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘பக்குவம் அடைவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், யிசிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது’ என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :

2198அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘பக்குவமடைவது என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘அது சிவக்கும்வரை’ என்று விடையளித்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை தடுத்துவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார்கள். அத்தியாயம் :

2199இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவ தற்குமுன் வாங்கி, அவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மரத்தின் உரிமை யாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; (மரத்திலுள்ள) உலராத கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்” என்று கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

2200சுலைமான் பின் மஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், கடனுக்காக அடைமானம் வைப்பது குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர்கள், ‘‘அது தவறாகாது” என்று சொன்னார்கள். மேலும் ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தமது கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித் தார்கள் என்றார்கள். அத்தியாயம் :

2202அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை யிகைபர்’ பகுதிக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (சென்றுவிட்டு கைபரிலிருந்து) உயர்ரகப் பேரீச்சம் பழங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் (உயர் ரகமானவையாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம்பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களுக்குப் பதிலாக இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’வையும், மட்டமான பேரீச்சம்பழத்தில் மூன்று ‘ஸாஉ’களுக்குப் பதிலாக இந்தப் பேரீச்சம்பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களையும் நாங்கள் வாங்குவோம்” எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவ்வாறு செய்யாதீர்! மட்ட மான பேரீச்சம்பழத்தை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளுக்குப் பதிலாகத் தரமான பேரீச்சம்பழத்தை வாங்குவீராக!” எனக் கூறினார்கள்.72 அத்தியாயம் :

2203இப்னு உமர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மரகந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த பேரீச்ச மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப் படாமல் விற்கப்படுமானால், அவை மகரந்தச் சேர்க்கை (செய்து விற்பனை) செய்தவருக்கே உரியவையாகும். (செல்வம் வைத்துள்ள) அடிமையும் பயிர் செய்யப் பட்ட நிலமும் அவ்வாறுதான். இந்த மூன்றையும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தம்மிடம் குறிப்பிட்டுச் சொன்ன தாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

2204அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால், அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கிய வர் (தமக்குச் சேர வேண்டுமென்று) முன் நிபந்தனையிட்டிருந்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2205இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’வைத் தடை செய்தார்கள். (அதாவது:) ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலிருக்கும் (உலராத) கனி களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது, கொடியிலுள்ள உலராத திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பது, பயிரிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பது ஆகிய அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2206நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்த அவருக்கே மரத்தின் (தற்போதைய) கனிகள் சேரும்; விலைக்கு வாங்கியவர் (அதன் கனிகள் தமக்கே சேர வேண்டும் என்று) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2207அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘முஹாகலா, முகாளரா, முலாமசா, முனாபதா, முஸாபனா ஆகிய வணிக முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.74 அத்தியாயம் :

2208ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரத்தி லுள்ள கனிகள் பக்குவமடைவதற்குமுன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘பக்குவமடைதல் என்றால் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்” என்று பதிலளித் தார்கள். மேலும், ‘‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட தாக) கருதுவீர்” என்றும் கேட்டார்கள். அத்தியாயம் :

2209இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது இறை நம்பிக்கை உள்ள மனிதருக்கு உவமையாகும்” என்றார்கள். நான் ‘‘அது பேரீச்ச மரம்தான்” என்று சொல்ல நினைத் தேன். அப்போது அங்கிருந்தவர்களி லேயே நான் வயதில் இளையவனாக இருந்தேன். (ஆதலால் நான் எதுவும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2210அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவருடைய உரிமையாளர்களிடம் அவர் செலுத்த வேண்டியுள்ள (அன்றாட) வரியைக் குறைக்குமாறும் கட்டளை யிட்டார்கள்.77 அத்தியாயம் :

2211ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களின் அன்னை ஹின்த் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சரான மனிதராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என்மீது அது குற்றமாகுமா?” எனக் கேட்டார்கள். அதற்கு, ‘‘உனக்குப் போது மானதை நியாயமான முறையில் (வழக்கத் திலுள்ள அளவு) நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக்கொள்ளுங்கள்!” என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள். அத்தியாயம் :

2212ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(அநாதைகளைப் பராமரிப்போரில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்” (4:6) என்ற இறைவசனம், அநாதைகளை நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்கள் தொடர்பாக அருளப்பட்டது. காப்பாளர் ஏழையாக இருந்தால் (வழக்கப் படி) நியாயமான முறையில் (தம் உழைப் பிற்குக் கூலியாக) அநாதைகளின் பொருளை உண்ணலாம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2213ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் விலைக்கோள் உரிமையை(ப் பங்காளிக்கு) ஏற்படுத்தினார்கள். (ஆனால்,) எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப் பட்டிருந்தால், (பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற) விலைக்கோள் உரிமை கிடையாது. அத்தியாயம் :

2214ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத ஒவ்வொரு செல்வத்திலும் விலைக்கோள் உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப்பட்டிருந்தால், விலைக்கோள் உரிமை கிடையாது. இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிபிரிக்கப்படாத ஒவ்வொன்றி லும்’ என்றும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் யிஒவ்வொரு பொருளிலும்’ என்றும் இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :

2215அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள ஒரு குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகைவாசலை அடைத்துக்கொண்டது. அப்போது அவர்கள் தமக்குள், ‘‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர். அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டுவருவேன். அவர்கள் அருந்து வார்கள். பிறகுதான் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். (இந்நிலையில்) ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்ப வில்லை. குழந்தைகள் (பால் கேட்டு) என் காலடியில் அழுது கூச்சலிட்டுக்கொண்டி ருந்தனர். வைகறைவரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக! நாங்கள் அதன் வழியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொள்வோம்” என்று பிரார்த்தித்தார். அவ்வாறே பாறை (சற்று) நகர்ந்தது. மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரருடைய புதல்வியரில் ஒருத்தியை, ஓர் ஆண் ஒரு பெண்ணை விரும்புவதைவிட ஆழமாக விரும்பினேன். தனக்கு நான் நூறு பொற்காசுகள் கொடுக்காத வரை அவளை நான் அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். நான் உழைத்து நூறு பொற்காசுகளைத் திரட்டினேன். அவளுடைய இரு கால்களுக்கிடையே (தவறு செய்ய) நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வ) உரிமை(யான திருமணம்) இல்லாமல் உடைத்துவிடாதே!› என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டுவிட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது அன்பை நாடியே நான் செய்திருப்பதாக நீ கருதியிருந்தால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை) சற்றே நகர்த்துவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே அவர்களைவிட்டு அல்லாஹ் (பாறையை) மூன்றில் இரு மடங்கு நகர்த்தினான். மற்றொருவர், ‘‘இறைவா! நான் ஒரு யிஃபரக்’ (மூன்று ‘ஸாஉ’கள்) தினையைக் கூலியாகப் பேசி, ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு அந்த ஒரு யிஃபரக்’ தினையை நான் கவனமாகப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அவற்றின் மேய்ப்பரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!” என்றார். ‘‘(அதோ!) அந்த மாடுகள் மற்றும் அவற் றின் மேய்ப்பரிடம் செல் (எடுத்துக்கொள்.) அவை எல்லாம் உமக்குரியவைதான்” என்று நான் கூறினேன். அதற்கு அவர், ‘‘என்னைக் கேலி செய்கிறீரா?” என்று கேட்டார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான்” எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது அன்பை நாடியே செய்திருப்பதாக நீ கருதினால், எங்களைவிட்டு (இந்தப் பாறையை முற்றாக) அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். முழுமையாக அது அகற்றப்பட்டது.79 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2216அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது உயரமான, பரட்டைத் தலையுடைய, இணைவைப்பவரான ஒரு மனிதர் தம் ஆடுகளை ஓட்டிவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவை விற்பனைக்கா? அல்லது (யாருக்கேனும்) அன்பளிப்பாகக் கொடுப்பதற்கா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை; விற்பனைக்குத்தான்” எனக் கூறினார். அப்போது அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள். அத்தியாயம் :

2217நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) யிசாரா’வுடன் புலம்பெயர்ந்து (இராக்கிலிருந்து) வெளியேறினார்கள். மன்னன் ஒருவன், அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சிபுரிந்த ஓர் ஊருக்குள் (எகிப்துக்குள்) யிசாரா’ உடன் இப்ராஹீம் (அலை) அவர்கள் நுழைந்தார்கள். ‘‘பெண்களிலேயே மிக அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்” என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, ‘‘இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?” என மன்னன் கேட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள், யிஎன் சகோதரி’ என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ என் கூற்றைப் பொய்யாக்கிவிடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை” என்று சொன்னார்கள். பிறகு யிசாரா’வை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதுவிட்டு, ‘‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது கற்பைக் கணவனைத் தவிர மற்றவர் களிடமிருந்து காப்பாற்றியிருந்தால், இந்த இறைமறுப்பாளரை என்மீது சாட்டிவிடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் வலிப்பு வந்து, கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலை யைக் கண்ட சாரா, ‘‘இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று சொல்லப்படுமே!” என்றவுடன், மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங் கினான். உடனே சாரா (அலை) அவர்கள் எழுந்து அங்கத் தூய்மை செய்து தொழுது விட்டு, ‘‘இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது கற்பைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவன் வலிப்பு வந்து கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, ‘‘இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று சொல்லப்படுமே!” என்று பிரார்த்தித் தார்கள். இவ்வாறு மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக் கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்” என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, (நமக்குப்) பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.80 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2218ஆயிஷா (ரலி அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி, அப்த் பின் ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் அடிமை விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸ் உடைய மகனாவார். என் சகோதரர் (அவரது மரணத்தின்போது) இவன் தம் மகன் என்று என்னிடம் வலி யுறுத்திக் கூறினார். இந்த அடிமை அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்” என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரனே; என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வடிமையிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்டபிறகும், அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம், ‘‘அப்தே! அவன் உமக்குரியவனே. ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது” எனக் கூறினார்கள். பிறகு (தம் துணைவி) சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! இந்த அடிமையிடம் நீ பர்தாவைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்கள் ஒருபோதும் அந்த அடிமையைக் கண்டதில்லை.81 அத்தியாயம் :

2219இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஸுஹைப் (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை எனச் சொல்லாதீர்” எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என்று நான் சொல்வதற் காக எவ்வளவு பொருட்களைக் கொடுத் தாலும் அதை நான் ஒப்பமாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருந்தபோது திருடப்பட்டுவிட்டேன்” என்றார்கள்.82 அத்தியாயம் :

2220உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்துவந்தேன்; இவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் உண்டா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பலன்)களுடன்தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்” என்றார்கள்.83 அத்தியாயம் :

2221அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்ற போது, ‘‘இதன் தோலை நீங்கள் பயன்படுத் தக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘இது செத்த ஆடாயிற்றே!” என்ற னர். அதற்கு ‘‘அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.84 அத்தியாயம் :

2222அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! (உலக அழிவுக்குமுன்) மர்யமின் மைந்தர் (ஈசாலிஅலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கி றார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியைக் கொல்வார். காப்பு (ஜிஸ்யா) வரியை வாங்க மறுப்பார். (இஸ்லாம் ஒன்றையே ஏற்பார். அந்நாளில்) வாங்கு வதற்கு ஆளில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2223இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது, ‘‘அவரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக (சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை உருக்கி விற்றனர். எனவே, அவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள். அத்தியாயம் :

2224அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களை அல்லாஹ் தனது கருணை ‘லிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப் பட்டிருந்தது. (ஆனால்,) அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்டனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக! அல்லது சபிப்பானாக என்பதைக் குறிக்க மூலத்தில்) யிகா(த்)தல’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (இதற்கு யிகொல்வானாக!› என்பதே சொற்பொருளாகும்.) இங்கு அதற்கு யிசபிப்பானாக!› என்பதே பொரு ளாகும். குர்ஆனில், ‘‘பொய்யர்கள் சபிக்கப் படுவார்கள்” (51:10) என்பதைக் குறிக்க யிகு(த்)தில’ எனும் சொல்லே மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. அத்தியாயம் :

2225சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, ‘‘இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் இந்த உருவங்களை (வரைந்து) தயாரிக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘‘யார் ஓர் உருவத்தை வரைகிறாரோ அவர் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்வரை, அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவரால் ஒருகாலும் அதில் உயிரை ஊத முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்” என் றார்கள். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உமக் குக் கேடுதான்! நீர் வரைந்துதான் தீர வேண்டும் என்றால், மரம் போன்ற உயிரற் றவைகளை வரைவீராக!” என்றார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஒரு ஹதீஸை, நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்கள் செவியுற்றுள்ளார்கள். அத்தியாயம் :

2226ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம்வரையிலான வசனங்கள் (2:275லி281) இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘‘மதுபான வணிகம் தடை செய்யப்பட்டுவிட்டது” என்றார்கள்.86 அத்தியாயம் :

2227நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.87 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2228அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு (வேறு அடிமைப் பெண்ணைக் கொடுத்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கொள்ளவே) ஸஃபிய்யா நபி (ஸல்) அவர்களுக்கு வந்துசேர்ந்தார்கள். அத்தியாயம் :

2229அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். (அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால், (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிப்பதால் உங்கள்மீது (குற்றம்) இல்லை. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் எழுதிவிட்ட எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.90 அத்தியாயம் :

2230ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பின்தேதியிட்டு விடுதலை அளிக் கப்பட்ட (முதப்பரான) அடிமையை (அவருடைய உரிமையாளரின் கடனை அடைப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் விற்பனை செய்(துகொடுத்)தார்கள். அத்தியாயம் :

2231ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பின்தேதியிட்டு விடுதலை அளிக்கப்பட்ட அடிமையான) முதப்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விற்றார்கள். அத்தியாயம் :

2233ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது: விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குச் சாட்டை யடி கொடுங்கள்! மூன்றாவது தடவை, அல்லது நான்காவது தடவையும் அவள் விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.92 அத்தியாயம் :

2234நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ‘‘உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபசாரம் செய்து, அது வெளிப் பட்டுவிட்டால், அவளுக்கு (ஐம்பது) சாட்டையடியைத் தண்டனையாக அவர் வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். மீண்டும் அவள் விபசாரம் செய்தால் தண்டனையாக அவளுக்கு அவர் சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல்) அவளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டாம். பிறகு மூன்றாம் முறை அவள் விபசாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை அவர் விற்றுவிடட்டும்!” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2235அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தார்கள். (கமூஸ்) கோட்டையை அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியாக்கிக்கொடுத்தான். அப்போது (சிறைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அவரோ புது மணப் பெண்ணாக இருந்தார். அவருடைய கணவரோ கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யிசத்துர் ரவ்ஹா’ எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) யிஹைஸ்’ எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக!” என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல் தமக்குப் பின்னால் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரை அமைத்ததைப் பார்த்தேன். பிறகு ஒட்டகத்தின் அருகில் அமர்ந்து, தமது முழங்காலை (கீழே) வைத்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால்மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள். அத்தியாயம் :

2236ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில், ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல் களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப் படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற் றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கூடாது; அது தடை செய்யப் பட்டதுதான்” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘‘யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2237அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாய் விற்ற காசையும் விபசாரியின் வருமானத்தையும் சோதிடரின் தட்சணை யையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2238அவன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவரது தொழிற் கருவிகளை உடைக்கும் படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாய் விற்ற கிரயம், அடிமைப் பெண்ணின் (தவறான) சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்; பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் அவர்கள் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.94 அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath