ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 32 · Virtues of the Night of Qadr

2014நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ‘லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க) இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2015இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமளானின்) இறுதி ஏழு (இரவு)களில் ஒன்றில் ‘லைலத்துல் கத்ர்' எனும் கண்ணிய மிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்!” என்று கூறி னார்கள். அத்தியாயம் :

2016அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப் பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன். ஆகவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகச் சிதறல்கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந் தது. அதனால் பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்யும் நிலையில் நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை நான் பார்த்தேன்.3 அத்தியாயம் :

2017அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2018அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப் பகுதியில் உள்ள பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி ஒரு மாதத்தில் ‘இஃதிகாஃப்' இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (வழக்கமாக இல்லம்) திரும்பும் இரவில் (இல்லம் திரும்பாமல் பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அல்லாஹ் நாடிய விஷயங் களை அவர்களுக்குக் கட்டளையிட் டார்கள். பின்னர், ‘‘நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப் பட்டது: பின்னர் அது எனக்கு மறக்க வைக்கப்பட்டது; எனவே, (ரமளானின்) இறுதிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுங்கள்! (அந்த நாட்களிலுள்ள) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) சஜ்தா செய்வதைப் போன்று (கனவு) கண்டேன்” எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் (இரைச்சலுடன்) மழை பொழிய, பள்ளிவாசல் (கூரை ‘லிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2019நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (லைலத்துல் கத்ரை) தேடிக்கொள் ளுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2020ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ‘‘ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்!” என்று கூறுவார்கள். அத்தியாயம் :

2021நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! (அதாவது) ‘‘லைலத்துல் கத்ரை இருபத் தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடிக்கொள்ளுங்கள்!” இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2022அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லைலத்துல் கத்ர் இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது; அது இருபத்தொன்ப தாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது! இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :

2023உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘லைலத்துல் கத்ர்' பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக்கொண்டி ருந்தனர். (அவர்களைத் தடுக்கச் சென்ற) நபி (ஸல்) அவர்கள், ‘‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சண்டையிட்டுக்கொண்டிருந்த னர்; எனவே, அது (பற்றிய விளக்கம்) அகற்றப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத் தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடிக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

2024ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறையை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள். அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath