ஸஹீஹ் அல்-புகாரி 29 · Virtues of Madinah
1867நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனா நகரம் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்!2 இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத் தில் இல்லாத) புதிய செயல் எதுவும் உருவாக்கப்படக் கூடாது. யார் (மார்க்கத் தில் இல்லாத) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை உருவாக்குகிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1868அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளை யிட்டார்கள்; “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (உங்கள் தோட்டத்தை) எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தார் “இதற்கான விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப் பாளர்களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ் வாறே அவை தோண்டப்பட்டன. அவர் களின் கட்டளைப்படியே இடிபாடுகள் (அகற்றப்பட்டு) சமப்படுத்தப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாசலின் கிப்லா திசையில், (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித் தோழர்கள்) நட்டனர். அத்தியாயம் :
1869அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “மதீனாவின் இரு கருங்கல் மலை களுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவால் (என் வாயிலாக) புனிதமாக்கப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மதீனாவின் மேட்டுப் பகுதியில் வசித்த) பனூ ஹாரிஸா குலத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று, “பனூ ஹாரிஸா குலத்தாரே! நீங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு வெளியே இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு, “இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்” என்றார்கள். அத்தியாயம் :
1870அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (நாம் படிக்கின்ற நூல்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை. (இந்த ஏட்டில் உள்ளதாவது): “ஆயிர் (அய்ர்) என்ற மலையிலிருந்து இன்ன இடம் (‘ஸவ்ர்’ அல்லது ‘உஹுத்’)வரை மதீனா புனித மானதாகும்;3 இதில் யாரேனும் (மார்க்கத் தில் இல்லாத) ஒன்றைப் புதிதாக ஏற்படுத் தினால், அல்லது அவ்வாறு ஏற்படுத்துப வருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் அவன்மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ அவனிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. முஸ்லிம்களில் யார் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானது) ஆகும். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த) உரிமையாளர்களின் அனுமதியின்றி, வேறொருவரைத் தன் உரிமையாளர் என்று கூறினால், அவன்மீதும் அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கூடுதலான வழிபாடு என்பதைக் குறிக்கும்) ‘அத்ல்’ எனும் சொல்லுக்கு, இங்கு ‘பரிகாரம்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
1871அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக் கூடியதும் ‘யஸ்ரிப்’ என்று மக்கள் அழைக் கக்கூடியதுமான ஓர் ஊருக்கு (புலம் பெயர்ந்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன். அதுதான் மதீனா. இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1872அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (அறப்போர் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் “இது ‘தாபா!’ (தூயது!)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
1873அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருப்பதை நான் கண்டால், அவற்றை (விரட்டவோ பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்கமாட்டேன். (ஏனெனில்) “மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனித மானதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
1874அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனா சிறந்த நிலையில் இருக்கும் போதே, அதைவிட்டு மக்கள் சென்றுவிடுவர். வன விலங்குகளும் பறவைகளும் மட்டுமே அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும். (மறுமை நாளில்,) இறுதியாக எழுப்பப்படவிருப்பவர்கள் ‘முஸைனா’ குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர். அவர்கள் இருவரும் தம் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நாடிச் செல்வார்கள்; அங்கு வனவிலங்குகளையே காண்பர். (அல்லது அது வெறுமையாக இருப்பதைக் காண்பர்.) இறுதியில் ‘அல்வதா’ (எனும்) மலைக் குன்றை அடைந்தவுடன் மூர்ச்சையுற்று முகங்குப்புற விழுந்து (இறந்து)விடு வார்கள்5 அத்தியாயம் :
1875அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன் நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத் தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ள வர்களையும் ஏற்றிக்கொண்டு வாகனங் களை விரட்டியவர்களாக (மதீனாவி லிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது; அவர்கள் அறிந்திருந்தால். பின்னர் ‘ஷாம்’ (சிரியா) வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் வாகனங்களை விரட்டியவர்களாக தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்கொண்டு (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது; இதை அவர்கள் அறிந்திருந்தால். பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் வாகனங்களை விரட்டியவர்களாக தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்கொண்டு (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது; அவர்கள் அறிந்திருந்தால்.6 இதை சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1876அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1877அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்து போவார்கள். இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1878உசாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறி நோட்டமிட்டார்கள். பிறகு “நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? மழைத் துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப் போவதை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்கள்.8 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1879நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மசீஹுத் தஜ்ஜாவைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்; ஒவ்வொரு வாசலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1880அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழையமாட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1881நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு நுழை வாயிலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து நின்று அதைக் காவல் புரிந்துகொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை குலுங்கும்; அப்போது ஒவ்வோர் இறைமறுப்பாளனையும் நய வஞ்சகனையும் அல்லாஹ் (மதீனா விலிருந்து) வெளியேற்றிவிடுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1882அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தஜ்ஜாலைப் பற்றி நீண்டதொரு ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்கள். எங்களுக்கு அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்: மதீனாவின் நுழைவாயில்களில் நுழை வது தஜ்ஜாலுக்குத் தடை செய்யப்பட்டி ருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா(வை அடுத்துள்ள) உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களிலேயே சிறந்த ஒரு மனிதர் புறப்படுவார்; அவர் அவனிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவனது செய்தியை எங்களுக்கு முன்னறி விப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதிகூறுகிறேன்” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), “நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (நான்தான் இறைவன் எனும்) இந்த விஷயத்தில் நீங்கள் சந்தேகம்கொள்வீர்களா?” என்று கேட்பான். மக்கள் “இல்லை” என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது அந்த (நல்ல) மனிதர் உயிர்பெற்றதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தைவிடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்குமுன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று கூறுவார். தஜ்ஜால், “நான் இவரைக் கொல்வேன்” என்பான். ஆனால், அவர்மீது அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது. அத்தியாயம் :
1883ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். மறுநாள் அவர் காய்ச்சலுடன் வந்து, “(இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். (எனவே, அவர் மதீனாவை விட்டு வெளியேறினார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர் களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார் கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
1884ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுத் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக் காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர், “இவர்களைக் கொல்வோம்” என்றனர். மற்றொரு பிரிவினர், “இவர் களைக் கொல்லக் கூடாது!” என்றனர். அப்போது “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்!” (4:88) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. “நெருப்பு, இரும்பின் துருவை அகற்றுவதைப் போன்று இந்நகரம் (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
1885அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தை (பரக்கத்) போன்று இரு மடங்கை மதீனா வில் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1886அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும்போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தமது ஊர்தி ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள். அவர்கள் பிராணியின்மீது அமர்ந்திருந்தால், மதீனாமீது கொண்ட அன்பால் அதை முடுக்கிவிடுவார்கள். அத்தியாயம் :
1887அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அருகே இடம்பெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூ சலிமா குலத்தாரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடித் தடங்களின் நன்மைகளை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். ஆகவே, பனூ சலிமா குலத்தார் (தாம் முன்பு வசித்துக்கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர். அத்தியாயம் :
1888நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவுமேடை (மிம்பரு)க்கும் இடைப் பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும். எனது சொற்பொழிவு மேடையானது, எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.10 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1889ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் கண்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, இவ்வாறு (கவிதை) கூறுவார்கள்: காலை வாழ்த்துக் கூறப்பெற்ற நிலையில் ஒவ்வொரு மனிதனும் தம் குடும்பத்தாரோடு காலைப் பொழுதை அடைகிறான் (ஆனால்,) அவன் செருப்புவாரைவிட மிக அருகில் மரணம் இருக்கிறது (என்பதை அவன் அறிவதில்லை) பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரல் எழுப்பி பின்வரும் கவிதை கூறுவார்கள்: ‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும் ‘ஜலீல்’ கூரைப் புல்லும் என்னைச் சுற்றியிருக்க, ஒரு இராப் பெழுதையேனும் (மக்காவின்) பள்ளத்தாக்கில் நான் கழிப்பேனா? (மக்காவின்) ‘மிஜன்னா’ (சுனை) நீரை ஒரு நாள் ஒரு பொழுது நான் சுவைப்பேனா? அந்த ஷாமா, தஃபீல் மலைகள் எனக்குத் தென்படுமா? மேலும் பிலால் (ரலி) அவர்கள், “இறைவா! ஷைபா பின் ரபிஆ, உத்பா பின் ரபீஆ, உமய்யா பின் கலஃப் ஆகியோர் எங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றி, இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியதைப் போன்று, அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து)விடுவாயாக!” என்று கூறுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்ததைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்’து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளம் புரிவாயாக! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம்பெயரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) ‘புத்ஹான்’ எனும் ஓடையில் மாசடைந்த தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. அத்தியாயம் :
1890உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு வாயாக! எனது மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்துவாயாக! இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆதாரம்: Sahih al Bukhari
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath