ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 17 · Prostration During Recital of Qur'an

1067அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண் ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.2 அத்தியாயம் :

1068அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், ‘ஹல் அத்தா அலல் இன்ஸான்’ (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.3 அத்தியாயம் :

1069இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஸாத்’ அத்தியாயத்தில் உள்ள (24ஆவது) வசனம் கட்டாயமாக (ஓதலுக் கான) சஜ்தா செய்ய வேண்டிய வசனங் களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (ஸாத் அத்தியாயத்தின்) அந்த (வசனம் வரும்) இடத்தில் சஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

1070அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தை (53:62) ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். ஒரேயொரு மனிதரைத் தவிர, அங்கிருந்த மக்கள் அனைவரும் (நபியவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தனர். அவர் ஒரு கையளவு பொடிக் கற்களையோ மண்ணையோ எடுத்துத் தனது நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்’ என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன். அத்தியாயம் :

1071இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் ஜின்களும் மனிதர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :

1072அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் (‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தில் சஜ்தா செய்வது பற்றிக்) கேட்டேன். அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதிக்காட்டி னேன். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய வில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

1073ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அந் நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தா செய்யவில்லை.7 அத்தியாயம் :

1074அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ அத்தியாயத்தை ஓதி, அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சிரவணக்கம் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “அபூ ஹுரைரா அவர்களே! நீங்கள் சிர வணக்கம் செய்வதை நான் பார்த்தேனே (ஏன்)?” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், (இந்த அத்தியாயத் தில்) சிரவணக்கம் செய்வதை நான் பார்த்திராவிட்டால், நானும் சிரவணக்கம் செய்திருக்கமாட்டேன்” என்று பதிலளித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

1075இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டும்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தா செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.8 அத்தியாயம் :

1076இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது, அவர்கள் சஜ்தா வசனத்தை ஓதுவார்கள். அப்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சஜ்தா செய்வாம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு சஜ்தாவில் நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது. அத்தியாயம் :

1077ரபீஆ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், தாம் உமர் (ரலி) அவர்களின் அவைக்கு வந்தது குறித்துக் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று ‘அந்நஹ்ல்’ (எனும் 16ஆவது) அத்தி யாயத்தை ஓதினார்கள். அதில் சஜ்தா வசனம் (16:50) வந்ததும் இறங்கி (ஓதலுக்கான) சஜ்தா செய்தார்கள். மக்களும் சஜ்தா செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை (உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அப்போது சஜ்தா வசனத்தை அடைந்ததும், “மக்களே! நாம் சஜ்தா வசனத்தை ஓதப்போகிறோம். யார் சஜ்தா செய்கிறாரோ அவர் நல்லதைச் செய்தவ ராவார். யார் சஜ்தா செய்யவில்லையோ அவர்மீது எந்தக் குற்றமுமில்லை” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் சஜ்தா செய்யவில்லை. இது தொடர்பாக நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகையில், “(ஓதலுக்காக) சஜ்தா செய்வதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை; நாமாக விரும்பிச் செய்தால் தவிர” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

1078அபூராஃபிஉ நுஃபைஉ அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷா தொழுகையைத் தொழுதேன். அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (அதில் சஜ்தா வசனம் (21) வந்த) உடன் சஜ்தா செய்தார்கள். அவர்களிடம் நான், “என்ன இது? (ஏன் தொழுகையிலேயே சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துள்ளேன். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) அதை நான் ஓதினால் சஜ்தா செய்வேன்” என்று கூறினார்கள்.10 அத்தியாயம் :

1079இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசன முள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக்காட்டும்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தா செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட (போதுமான) இடம் கிடைக்காது. அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath