கிறிஸ்தவம்
பின்செல்

சங்கீதங்கள் 93

1யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

2உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர்.

3யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

4திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

ஆதாரம்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath