கிறிஸ்தவம்
பின்செல்

சங்கீதங்கள் 70

1தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.

2என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.

3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.

4உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

5நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும்.

ஆதாரம்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath