கிறிஸ்தவம்
பின்செல்

சங்கீதங்கள் 6

1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.

2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.

3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.

4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.

5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.

7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.

8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

10என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.

ஆதாரம்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath