கிறிஸ்தவம்
பின்செல்

சங்கீதங்கள் 29

1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.

3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

7யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.

8யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.

9யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.

11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

ஆதாரம்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath