சங்கீதங்கள் 128
1யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
WEBREATH · 11:11
«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath