சங்கீதங்கள் 126
1சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
5கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
WEBREATH · 11:11
«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath