கிறிஸ்தவம்
பின்செல்

சங்கீதங்கள் 111

1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.

3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.

5தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

6தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

7அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

8அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.

9அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

ஆதாரம்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath