கிறிஸ்தவம்
பின்செல்

எசேக்கியேல் 15

1யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?

3ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

4இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?

5இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?

6ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

7என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

8அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

ஆதாரம்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath